Saturday, 2 June 2012

சைவசமயத்தவர்களது முழுமுதற் கடவுள் சிவனாகும். சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா,இலங்கை,நேபாளம் உட்பட பல நாடுகளில் கோயில்கள் பல உண்டு.

சோதி இலிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள்

இந்தியாவில் அமைந்துள்ள பன்னிரெண்டு சோதி இலிங்கங்களும் அது அமைந்துள்ள இடங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. திருவண்ணாமலை (தமிழ்நாடு) அருணாச்சலமே மூல சிவதலம்.
  1. சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)
  2. மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)
  3. மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியப்பிரதேசம்)
  4. ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்காரம் (மத்தியப்பிரதேசம்)
  5. வைத்திய நாதேசுவர்-பரளி (மகாராட்டிரம்)
  6. பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகாராட்டிரம்)
  7. இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)
  8. நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகாராட்டிரம்)
  9. விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)
  10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராட்டிரம்)
  11. கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)
  12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராட்டிரம்)

பஞ்சபூத சிவத்தலங்கள்

உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)
  1. மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர், (திரு + ஆர் + ஊர் ; ஆர் = மண்)
  2. நீர் (அப்புத்தலம்) -திருவானைக்கா திருச்சிராப்பள்ளி
  3. தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை
  4. வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி
  5. வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்

ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள்

சிவ பெருமானின் ஐம்பெரும் தாண்டவங்கள் என்று அடையாளம் காட்டப்படும் ஆலயங்களும் அவை இருக்கும் இடங்களும் இவைதான்.
  1. தில்லை(சிதம்பரம்)-ஆனந்த தாண்டவம்.
  2. திருவாரூர்-அசபா தாண்டவம்.
  3. மதுரை-ஞானசுந்தர தாண்டவம்.
  4. அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம்.
  5. திருமுருகன்பூண்டி-பிரம தாண்டவம்.

ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்தினைக் கூறலாம்.அந்த ஐம்பெரும் மன்றங்கள் அமைந்துள்ள சிவாலயங்கள் (அடைப்புக் குறிக்குள் சபைகள்)
  1. தில்லை(சிதம்பரம்)-பொன் மன்றம் (கனக சபை).
  2. திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை).
  3. மதுரை-வெள்ளி மன்றம் (இரஜத சபை).
  4. திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).
  5. திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).

சத்த விடங்க சிவத்தலங்கள்

வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்.
  1. திருவாரூர்-வீதிவிடங்கர் (அசபா நடனம்).
  2. திருநள்ளாறு- நகரவிடங்கர் (உன்மத்த நடனம்).
  3. திருநாகைக் காரோணம் என்கிற நாகபட்டிணம்- சுந்தரவிடங்கர் (வீசி நடனம்).
  4. திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் (குக்குட நடனம்).
  5. திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் (பிருங்க நடனம்).
  6. திருவாய்மூர்- நீல விடங்கர் (கமல நடனம்).
  7. திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் (கம்சபாத நடனம்)

முக்தி தரவல்ல சிவத்தலங்கள்

முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள்
  1. திருவாரூர்-பிறக்க முக்தி தருவது
  2. சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது
  3. திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
  4. காசி-இறக்க முக்தி தருவது

தமிழகத்தின் நவ கைலாயங்கள்(சிவதலங்கள்)

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலும் தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இந்த நவ கைலாயங்கள் என அழைக்கப்படும் சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. நவ கைலாயங்கள் அமைந்திருக்கும் ஊர்கள்:
  1. பாபநாசம்
  2. சேரன்மகாதேவி
  3. கோடகநல்லூர்
  4. குன்னத்தூர் (திருநெல்வேலி)
  5. முறப்பநாடு
  6. திருவைகுண்டம்
  7. தென்திருப்பேரை
  8. ராசபதி
  9. சேர்ந்தபூமங்கலம்

No comments:

Post a Comment

THANK YOU