அப்துல்கலாம் எழுதிய புத்தகங்கள் கொரியா மொழியில் மொழிபெயர்க்கப்படுகின்றன
சியோல்,
ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதியபுத்தகங்கள் தென்கொரிய மக்களை பெரிதும் கவர்ந்தன.
அந்த புத்தகங்கள், கொரியா மொழியில் மொழி பெயர்க்கப்படுகின்றன.
கொரியாவில் அப்துல்கலாம்
ஜனாதிபதி அப்துல்கலாம் தென்கொரியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அவர் எழுதி இருக்கும் புத்தகங்கள் அந்த நாட்டு மக்களையும், மாணவர்களையும் பெரிதும் கவர்ந்து இருக்கிறது.
"விங்ஸ் ஆப் பயர்" என்ற புத்தகத்தை அப்துல்கலாம் எழுதி இருக்கிறார். அந்த புத்தகத்தை கொரிய நாட்டு பெண் எழுத்தாளரும், பேராசிரியருமான டாக்டர் ஓகே ஜங் லீ (வயது 51) மொழி பெயர்த்து இருக்கிறார். அந்த புத்தகம் கொரிய நாட்டு மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது.
மேலும் ஒரு புத்தகம்
இதைத்தொடர்ந்து, அப்துல்கலாம் எழுதிய "வழிகாட்டும்ஆன்மா" (கைடிங் சோல்ஸ்) என்ற மற்றொரு புத்தகத்தை, பேராசிரியர் ஓகே ஜங் லீ கொரியா மொழியில் மொழி பெயர்க்கிறார். இதற்காக அவர் சியோல் நகரில் தங்கி இருந்த அப்துல்கலாமை சந்தித்து பேசினார். அப்போது அப்துல்கலாம், அவர் எழுதிய ஒரு புத்தகத்தை கையெழுத்திட்டு கொடுத்தார். இதுகுறித்து பேராசிரியர் ஓகே ஜங் லீ நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறந்த விஞ்ஞானி
இந்திய ஜனாதிபதி எழுதிய "கைடிங் சோல்ஸ்" என்ற புத்தகத்தையும் மொழி பெயர்க்க இருக்கிறேன். அவர் சிறந்த விஞ்ஞானி, உழைப்பாளி. அவரது வாழ்க்கை கொரிய மாணவர்களுக்கு முன்உதாரணமானதாக இருக்கிறது.
15-ம் நூற்றாண்டில் கொரியாவை ஆண்ட மன்னர்செஜோங்-கை, அப்துல்கலாமில் பார்க்கிறேன். அவரது எழுத்தில் மனிதாபிமானமும், தன்னம்பிக்கையும் இருக்கிறது. புத்தர், ரவீந்திரநாத் தாகூர், கொரிய மன்னர் சூரோ ஆகியோர் போல அப்துல்கலாமும் ஒளிகாட்டும் விளக்காக திகழ்கிறார். இவ்வாறு கொரிய பேராசிரியர் கூறினார்.
No comments:
Post a Comment
THANK YOU