அலெக்ஸாண்டர். !!!
மகா சக்ரவர்த்தி அலெக்ஸாண்டர் தன் கடைசிக்
காலத்தில் ஆயிரக்கணக்கான வீரர்களை
வைத்துக்கொண்டு , " இறந்த பிறகு பெரிய மரப்
பெட்டியில் என் உடலை வைத்து மூடி , ஆணி
அறைந்து , கல்லறைக்குத் தூக்கிச் செவீர்கள் .
அப்போது என் இரண்டு கைகளை மட்டும்
மூடாமல் வெளியில் தெரியும்படி வைத்து நீங்கள்
தூக்கிச் செல்லவேண்டும் ! " என்று
கேட்டுக்கொண்டான் . " அப்படியே செய்கிறோம் !
" என்றார்கள் வீரர்கள் .
அப்போது ஒரு வீரன் , " மன்னிக்கணும் , கையை
மட்டும் ஏன் வெளியில் வைக்கச் சொல்றீங்க ? "
என்று கேட்டான் ." நான் இந்த உலகில்
எத்தனையோ போர்களை நடத்தினேன் ;
எத்தனையோ வெற்றிகளைக் கண்டேன் .
புகழையும் , கீர்த்தியையும் , பொன்னையும் ,
பொருளையும் சம்பாதித்தேன் . கடைசியில் இந்த
உலகத்தை விட்டுச் செல்லும்போது , நான்
ஒன்றையுமே எடுத்துக்கொண்டு போகவில்லை
என்பது இந்த உலகத்திற்குத் தெரியவேண்டும் ! " என்றான் அலெக்ஸாண்டர். .'
முடிசார்ந்த மன்னரும் மற்று முள்ளோரும்
முடிவில் பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவார்
...'--- திருக்குறளார் முனுசாமி . ஆனந்தவிகடன் .
01 - 04 - 2009 .
No comments:
Post a Comment
THANK YOU