அலெக்ஸாண்டிரியாவின் அழிந்து போன நூலகம் (கலைப்பொக்கிசம்)
பழையதும் : புதியதும் [அலெக்ஸாண்டிரியா நூலகம்]
அலெக்ஸாண்டிரியா எனும் மிகப்பழமையான நகரம் ‘அலெக்சாண்டர் தி கிரேட் “ஆல் நிர்மானிக்கப்பட்ட பல்கலைக் கழகமாக விளங்கிய ஒரு நகரம்.
இங்கிருந்த நூலகத்தில் படிக்கவும், அங்கு நடக்கும் பல சொற்பொழிவுகளை கேட்கவும் உலகத்தின் பல பகுதிகளில் இருந்து மாணாக்கர்கள் 900 ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தனர்.
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக விளங்கிய பாரோகளின் கலங்கரை விளக்கம், பளிங்கு கற்களால் கட்டப்பட்ட ஒரு பெரிய நூலகம் மற்றும் கருத்தரங்கு கூடம் இங்கிருந்தது.
உலகத்தின் ஒட்டுமொத்த காலாச்சார குவியலாக அலெக்ஸாண்டிரியா திகழ வேண்டும் என்பது வழிவழி வந்த ஆட்சியாளர்களின் விருப்பமாக இருந்தது. இது ஒரு துறைமுக நகரமாக இருந்ததால் வகை வகையான புத்தகங்களை இங்கு கொண்டுவந்து சேர்த்தனர். மொத்தம் ஐந்து இலட்சம் (5,00,000) புத்தகங்கள் இருந்ததாக அறியப்படுகிறது.
எறக்குறைய 385 A.D வாக்கில் இங்கு ஒரு சமயப் போராட்டம் வெடித்தது. கிருத்தவ பிஷப் தியோபிலியஸ் சராபிஸ் கோயில்கள் மற்றும் இந்நூலத்தின் பெரும் பகுதிகளை அழித்தார். சராபிஸ் என்பது கிரேக்க ரோமானியர்களின் பொதுவான கடவுள். அதன் பின் இந்நகரம் அப்படியே இருக்கவில்லை வளர்ந்தது. ஆனால் துரதிருஷ்டம் விடவில்லை.
A.D 642 ல் அரேபியப் படையெடுப்பால் அது மீண்டும் முழுக்க அழிக்கப்பட்டது. அத்தோடு இந்த பழமையான அறிவுகளஞ்சியம் ஒட்டு மொத்தமாக அழிக்கப் பட்டுவிட்டது.
மலைக்கவைக்கும் நவீன அலெக்ஸான்டிரியா நூலகம்( எகிப்து):
ஆனால் மனிதனின் முயற்சி மகத்தானது. மீண்டும் புதிதாக மெடிட்டேரியன் கடலை நோக்கிய நிலையில் பிரம்மாண்டமான நவீன நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் மிலியன் புத்தகங்கள் உள்ளது. ஆண்டுக்கு 1.5 மிலியன் பார்வையாளர்கள் வருகிறார்கள். இன்னும் வியப்பான விசயம் அதில் செயல்படும் பலவிதமான சர்வீஸ்கள்.
[கிரானைட்டாலான சுற்று சுவரின் ஒரு பகுதி 150 விதமான எழுத்துருக்கள் உள்ளது. தமிழ் எழுத்தும் உள்ளது காண்க]
இது நூலகம் மட்டுமல்ல மேலும் என்னென்ன இந்த கட்டிடத்தில் செயல்படுகிறது பட்டியல் இதோ:
1. வளைத்தள தகவல் மையம்
2. ஆறு வகையான நூலகத் தொகுப்பு
[1.Arts, multimedia and audio-visual materials,
2.the visually impaired,
3.children,
4.the young,
5.microforms, and
6.rare books and special collections]
[1.Arts, multimedia and audio-visual materials,
2.the visually impaired,
3.children,
4.the young,
5.microforms, and
6.rare books and special collections]
3. நான்கு வகையான மியூசியம்
[ 1.Antiquities,
2.Manuscripts,
3.Sadat and
4.the History of Science ]
4. பிளானட்டோரியம்
[ 1.Antiquities,
2.Manuscripts,
3.Sadat and
4.the History of Science ]
4. பிளானட்டோரியம்
5. குழந்தைகளுக்கு அறிவியல் பற்றி விளக்கமாக அறிந்து கொள்ள (EXploratorium)
6. ஒன்பது திரையரங்குகள்
7. விஸ்டா என அழைக்கப்படும் 3 D விசுவல் எபக்ட் அரங்கம்
8. எட்டு வகையான ஆராய்சி மையங்கள்
9. 15 வகையான நிரந்தர கண்காட்சிகள்
10. 4 ஆர்ட் கேலரிகள்
11. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமரக்கூடிய காண்ப்ரன்சிங் ஹால்.
(பி.கு : நாம் நீண்ட பெருமூச்சை மட்டுமே விடமுடியும். இங்கே ஒரே ஒரு நூலகம் கட்டிவைத்துவிட்டு மருத்துவமனையா ? நூலகமா ? என சண்டை போடுகிறார்கள். “ஒன்னுமே புரியல உலகத்திலே… “)
No comments:
Post a Comment
THANK YOU