Saturday, 18 August 2012

எடிசன் - மறுபக்கம்


எடிசன் - மறுபக்கம்


“உலகத்துக்கு என்ன தேவை என்று முதலில் கண்டு பிடிக்கிறேன். பிறகு,அந்த தேவையை பூர்த்தி செய்ய கண்டு பிடிக்கிறேன்.

இந்த பிரபலமான வாசகத்துக்கு சொந்தகாரர் இந்த உலகமே என்றும் மறக்காத தாமஸ் அல்வா எடிசன். எங்களாலும், பலராலும் மின்குமிழை கண்டுபிடித்ததன் மூலம் அறியபட்டவர். என்னமும் இந்த உலகம் இருக்கும்வரை இவரது கண்டுபிடிப்புகளும் இவரும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், எங்களால் ஒரு கண்டுபிடிப்பாளர் என்றும், ஒரு விஞ்ஞானி என்றும் அறியபட்ட தாமஸ் அல்வா எடிசன்....! வாழ்க்கை வரலாறை முழுமையாக வாசித்து பார்த்த பொது, எனக்கு தனித்து அவரை அப்படி மட்டுமே அழைக்க தோணவில்லை.
எடிசன் ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளர் மற்றும் விஞ்ஞானி என்பதை எல்லாம் தாண்டி, எடிசன் ஒரு சிறந்த தொழில் முனைவர் மற்றும் சிறந்த தொழில் அதிபரும் கூட!!!! வேறு பல விஞ்ஞானிகளிலில் இருந்து இவர் வேறுபடவும் எண்ணில் அடங்காத கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கவும், அவருக்கு உதவி செய்தது இந்த விஞ்ஞான புத்தி என்பதை விடவும், அவரது வணிக மூளையே காரணமாகும்.

எடிசனின் முதல் கண்டுபிடிப்பு யாரும் பெரிதாக அறியாத வாக்கு பதிவு இயந்திரம். இந்த இயந்திரம் நடைமுறைக்கு வர அமெரிக்க அரசியல்வாதிகள் அனுமதித்து இருந்தால், தேர்தல் நடைபெற்று முடிந்தவுடனே முடிவுகளை விரைவாக அறிவதுடன், மேலதிக பல செலவுகளும் தவிர்க்கபடும். ஆனால், இதை எடிசன் கண்டுபிடித்து அமெரிக்க அரசியல்வாதிகள் முன்பு காட்ட்டிய போது, “இதில் எங்களுக்கு சாதகமான மாற்றம் தர கூடிய எதுவுமே இல்லை. எனவே, நீங்கள் வேறு எதையும் கண்டு பிடியுங்கள் என்று சொல்லி விட்டார்கள். அப்போதுதான் எடிசனிடமிருந்த இந்த வணிக மூளை விழித்து கொண்டது...! அப்போது அவர் சொன்ன வாசகம் தான் அவர் வாழ்நாளில் பெரிய மாற்றத்துக்கு வழிகோலியது என்று சொல்லலாம்.

“மனித சமூகத்துக்கு என்ன தேவையோ அதை மட்டுமே நான் கண்டுபிடிப்பேன். மாற்றியதை நான் தொடவும் மாட்டேன் என்று, கூறினார். தாமஸ் அல்வா எடிசன் இதற்க்கு பிறகுதான் தன் வணிக மூளையையும் பயன்படுத்தி கண்டுபிடிப்புகளை தொடர்ந்தார். அதைவிடவும் சொல்ல கூடியது, எடிசன் தன் கண்டுபிடிப்புகளில் சம்பந்தபடாத கண்டுபிடிப்பாளர்களை தட்டி கொடுத்து ஊக்குவித்ததுடன், தன்னுடன் தனது கண்டுபிடிப்புகளுக்கு போட்டியாளர்களாக இருந்தவர்களுக்கு எதிராக செயல்படவும் தவறவில்லை. இதற்காக அவர் பணம் உழைக்க கூடிய கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிக்க தவறவில்லை. அதற்காக அவர் கண்டுபிடித்த கண்டுபிடிபுக்களாக குறிப்பிட்டு சொல்ல கூடியவை,

போனோகிராப் (ஒலிபதிவு செய்யும் கருவி) மற்றும், பேசும்படத்தின் அடிப்படையில் அமைந்த இவரது சில நிமிடங்கள் ஓட கூடிய படங்கள் இவை மூலம் எடிசன் வசூல் சக்கரவர்த்தியாக பணம் மேல் வாழும் ஒரு விஞ்ஞானியாக இருந்தார்.  மனித குல தேவையை முன்னிலைபடுத்தி கண்டுபிடிப்பை செய்வேன் என்று சொல்லிய எடிசன், பணம் உழைக்க இந்த பேசும் படங்கள் மூலம் கவர்ச்சிபெண்களை பயன்படுத்தி படங்களை எடுத்தார் என்பது உபரிதகவல்.

தனது கண்டுபிடிப்புகளில் தலையீடு செய்யும் கண்டுபிடிப்பாள்ர்களை அவர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களை விலைக்கு வாங்கிய எடிசன், பிற்காலங்களில் கண்டுபிடிப்புகளில் தன் கண்டுபிடிப்புக்கு உதவகோரி அவர்களை இணைத்து தன் கண்டுபிடிப்புகளை பூர்த்ஹ்டி செய்த பின்பு, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சன்மானம், பெயர் என்பவை கிடைக்க செய்யாமல் செய்த சம்பவங்கள் நிறையவே உண்டு.

அவர் காலத்தில், ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் இருந்த நாடுகளுக்கு வரும் அமெரிக்க இளம் சமூகத்தின் ஹீரோவாக எடிசன் இருந்தார் என்று அப்போதைய பிரபல எழுத்தாளர் வில்லியம் செக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். அவர் சொல்லும் போது, எடிசன் அப்போதைய அமெரிக்க இளம் வர்க்கத்திடம் ஒரு விஞ்ஞானியாக பார்க்கபட்டத்தை விட, ஒரு சிறந்த தொழில் முனைவோராக பார்க்கபட்டார். அமெரிக்க இலஞ்சர்களுடன், உரையாடும் போது, அவர்கள் எடிசனை விட சிறந்த தொழில் முனைவர் இந்த உலகத்தில் இல்லை என்ற மனப்பாங்குடன் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

ஆனால், எந்த தருணத்திலும் தாமஸ் அல்வா எடிசன் தான் ஒரு தொழில் முனைவோனாகவோ அல்லது தொழில் அதிபராகவோ வரலாறுகள் காட்டி விட கூடாது என்பதில் முனைப்பாக செயல்பட்டார். மின்குமிழை கண்டறிந்த எடிசன் மின்சாரம் பற்றி முழுமையாக அறிந்து இருக்கவில்லை. ஆனால், அமெரிக்கா முழுவதும் மின் வழங்க கூடிய மின்சார உற்பத்தி நிலையத்தை கொண்டு நடாத்தினார். அதுவும் மிகவும் தந்திரமாக மின்னை கண்டுபிடித்ததவர்களால் கூட செய்ய முடியாதபடி இதை செய்தார். என்னதான் மின்சாரம் இருந்தாலும் தான் கண்டுபிடித்த மின்குமிழ் மூலம்தான் அந்த மின்சாரம் பயன்படுகிறது என்று அமெரிக்க அரசியல் சபையை நம்பவைத்து, அதன் மூலம், மின் நிலைய அனுமதியை பெற்று சலுகை அடிப்படையில் கட்டணங்களை அறவிட்டு மக்களையும் தன் பக்கம் சேர்த்து கொண்டார்.

விஞ்ஞானி எடிசன் தன் வணிக மூளையின் உச்சத்தை பயன்படுத்தியது, தான் கண்டுபிடித்த சீமேந்து கலவையுடன் கூடிய கான்கிரீட் கட்டுமானத்தில்தான்!!! அப்போது இந்த தொழிலில் அவருக்கு நிறையவே போட்டியாளர்கள் இருந்தார்கள். எடிசன் வேறுமனே இதை கண்டுபிடித்ததுடன், நிறுத்திவிடவில்லை. அவள்ர் இந்த தொழிலில் ஈடுபட்ட நபர்களை வெற்றி கொள்ள நினைத்தார். அதற்க்கு மக்களின் வறுமையை கையில் எடுத்தார். அதாவது, வறுமையில் வாடும் மக்களுக்கு குறைந்த செலவில் தான் கண்டுபிடித்த கலவையை பயன்படுத்தி வீடுகளை குறைந்த செலவில் கட்டி தருவதாக சொல்லி கட்டி குடுத்ததுடன், பெரிய பெரிய கட்டுமான நிறுவகங்களுக்கு தான் இப்படி கட்டிய வீடுகளை அவர்களை கொண்டே வழங்க சொல்லி இருந்தார். இதனால், பெரிய பெரிய கட்டுமான நிறுவகங்கள் தங்களை விளம்பரபடுத்தி கொள்ள சந்தர்ப்பமாக அமைந்ததுடன், தவிர்க்க முடியாது எடிசனின் சீமேந்து கலவையை பயன்படுத்த வேண்டியும் வந்தது. இதன் மூலம், இலகுவாக அவர் போட்டியாளர்களை ஓரம் கட்டினார்.

எடிசன் மட்டுமல்ல இன்றைய காலத்தில் வாழும் பல பிரபலங்கள் பில்கேட்ஸ் வரை தங்களை பிரபல்யம் செய்து கொள்ள இந்த வணிக தந்திரங்களை பயன்படுத்தி கொள்ளுகிறார்கள். ஆனால், யாருமே தங்களை வணிகவியலாளர் என்று சொல்லி கொள்ள ஆசைபடுவது இல்லை!!! இது சாதாரண மனித இயல்பு!!

எப்போதுமே இந்த வணிகம் என்பது சரியான முறையில் பயன்படுத்தபட்டதாக வரலாறுகள் இல்லை. போட்டியாளனாக இருக்கும் ஒருவனை வீழ்த்தவும், தங்களை சரியாக பலடுத்தி கொள்ளவும், ஒருவனை அடக்கி ஆளவும் வரலாறுகளில் வணிகம் சரியாக பயன்பட்டு இருக்கிறது என்று மட்டும் கூற முடியும். அதற்க்கு தாமஸ் அல்வா எடிசன் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா???

No comments:

Post a Comment

THANK YOU