Saturday, 18 August 2012

தாமஸ் அல்வா எடிசன் - சில பகிர்வுகள்


தாமஸ் அல்வா எடிசன் - தோல்விகளில் வெற்றி கண்டவர்

தாமஸ் அல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் திகதி பிறந்தார் .
தாமஸ் அல்வா எடிசன் பற்றி அடிப்படை அறிவு அனைவரிடமும் இருக்கும்.மேலும் கொஞ்சம் பார்ப்போம் .

எடிசன்
11 வயதாக இருக்கும் போதே விளையாட்டாக தனது தந்தையின் நிலத்தில்
காய்கறிகளை பயிரிட்டு வந்தார் .இதனால் வருடமொன்றுக்கு 300 டொலர்கள்
கிடைத்தது .அதில் அரைவாசியை தனது தாயிடம் கொடுத்துவிட்டு மீதியை தனது
ஆய்வுகூடத்திற்கு செலவிட்டார் . காய்கறி வியாபாரம் பத்திரிக்கை வியாபாரம்
போன்றவற்றை புகையிரதத்திலேயே செய்தார் .

அவர் படிப்பறிவில் மந்தமாக இருந்தாலும் சிறு வயதிலிருந்தே ஏன் எதற்கு என
கேள்விகள் கேட்க்க பழகியவர் .பாடசாலைக்கு பின்னர் போகவில்லை
.முயற்ச்சிக்கும் ஊக்கத்திற்கும் சான்றாக விளங்கும் எடிசன் கோழி எப்படி
குஞ்சு பொரிக்கிறது என தானே இருந்து பார்த்த கதை அனைவருக்கும் தெரியும் .

தனது
சொந்த பத்திரிகையையும் புகையிரதத்திலேயே அச்சு அடித்து வெளியிட்டார்
.அச்சடிக்கும் இயந்திரத்தையும் ரயில் பெட்டியில் வைக்க அனுமதி பெற்றார் .
ஒரு வாரத்துக்கு 400 பிரதிகள் விற்றன . Grand trunk heral என்பதே அந்த வாரப்பத்திரிகை பெயர் .



பத்திரிகையின் ஆசிரியர் நிருபர் ,விற்ப்பவர் எல்லாமே எடிசன் தான் . பொதி
கொண்டு
செல்லும் பெட்டியிலேயே அவர் தனது பரிசோதனைகள் செய்தார் . ஒரு நாள் அப்படி
செய்துகொண்டிருக்கும் போது பொசுப்ப்ராஸ் துண்டொன்றை பெட்டியின் அடியில்
போட்டுவிட்டார் .அதனால் ரயில் பெட்டி தீப்பற்றிக்கொண்டது .

ரயில்
சாரதி தீயை அனைத்து விட்டு அச்சு இயந்திரம் ,இரசாயன பொருட்களை தூக்கி
வெளியில் வீசிவிட்டு எடிசன் காதில் பலமாக ஒரு அடியும் விட்டான் . இது
எடிசனை ஓரளவுக்கு செவிடாக்கியது .

பின்னர் என்ன ! பத்திரிக்கை தொழிலையும் விட்டுவிட்டு மின்னியலில் ஆர்வம் செலுத்தினார் .

புகையிரத நிலையத்தில் தந்தித்தொடர்பு
எவ்வாறு இயங்குகிறது என்று அறிவதில் எடிசனுக்கு ஆர்வம் ஏற்ப்பட்டது .ஆனால்
அப்போது அதில் வேளை செய்வது கனவாக இருந்தது .அதிர்ஷ்டவசமாக இந்த
தந்திதொடர்பிலும் வேலை கிடைத்தது . ஒருநாள் ஸ்டேசன் மாஸ்டரின் மகனை
விபத்திலிருந்து காப்பாற்றியதர்க்காக இந்த வேலையை ஸ்டேசன் மாஸ்டர் வாங்கி கொடுதார் .

பின்னர் தனக்கென ஒரு ஆய்வுகூடம் அமைத்து அதில் தந்திக்கருவிகளை செய்தார் .ஒரே கம்பியில் திசைக்கு இரண்டாக நான்கு செய்திகளை அனுப்பக்கூடிய தந்திக்கருவியை கண்டுபிடித்தார் .தந்தித்தொடர்பில் முக்கியமான கண்டுபிடிப்பு இதுவாகும் .

கிரகம் பெல் கண்டுபிடித்த தொலைபேசிக்கு காபன் ஒலிவாங்கியை அமைத்து நல்ல தொலைத்தொடர்பை உண்டாக்கினார் . அதில் அவரை மேலும் சீர்திருத்தங்களை செய்ய சொல்லி வெஸ்டர்ன் யூனியன் என்ற நிறுவனம் கேட்டுக்கொண்டது .

முக்கியமாக எடிசன் மிகவும் மறதிக்காரரும் கூட ..வரலாறுகளில் பதியப்பட்டவை 
1871
ஆம் ஆண்டு மேரி ஸ்டில்வெல் ஐ திருமணம் செய்தார் .திருமணமான முதல் நாள்
மாலையே மனைவியை பிறகு சந்திப்பதாக கூறிவிட்டு ஆய்வுகூடத்திற்கு வந்து
விட்டார் .அவர் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்துகொண்டு
இருந்ததால் வீடு செல்ல மறந்துவிட்டார் .நள்ளிரவில் வந்து ஒருவர்
நினைவுபடுத்தவே அவருக்கு நினைவு வந்தது .

ஒருமுறை எடிசன் வரிப்பணம் கட்ட கியூவில் நின்ற போது அவரது முறை வந்தது
.கிளார்க் உங்கள் பெயர் என்ன என்று கேட்க்க எடிசன் முழித்தார் .அவருக்கு
பின்னால் நின்றவர் நீங்கள் எடிசன் அல்லவா என்று கேட்டவுடனே அவருக்கு நினைவு வந்தது .





பன்னல் பதிகருவியை கண்டுபிடித்தது எடிசனே .இந்த போனோகிராப் தான் பின்னர் கிராமொபோனாக மாறியது .அதில் பதிவான முதல் வரிகள்" mary had a little lamb " இது அவரின் குரலிலேயே பதிவானது .

இதன்
பின்னர் தான் ஒளி தரக்கூடிய மின்குமிழ் உருவாக்கும் வேலையில்
இறங்கினார் .பல ஆய்வுகளின்G பின்னர் தான் தங்குதன் இழை குமிழினுள் ஒளிரும்
என கண்டுபிடித்தார் . இதற்க்குU அவரின் நண்பர்கள் 1600 பொருட்களை
பயன்படுத்தி நேரத்தை வீணாக்Rகிவிட்டோமே ,தங்குதனை முதலே பயன்படுUத்தி
இருக்கலாமே என்றார்களாம் . அதற்க்கு எடிசன் நான் நேரத்தை வீணாக்கவில்லை அந்த 1600 பொருட்களும் மின்குமிளில் ஒளிரமாட்டா என கண்டு பிடித்துள்ளேன் என்றாராம் .

1882 செப்டம்பர் நியுயோர்க் நகருக்கு மின்குமிழ் பொருத்த முனைந்தார் எடிசன் .Edison electric light company என்ற கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது . பேர்ல் தெருவில் இருந்த தலைமையகத்தில் இருந்து தான் நகரெங்கும் முதலில் மின் ஓடத்தொடங்கியது .



எடிசன்
கண்டுபிடித்ததில் சிலது:முக்கியமானவை என்று சொல்லலாம் : சினிமா படம்
எடுக்கும் கமெரா ,மின் டைனமோ ,மின் எஞ்சின் , ரயில்வே சமிக்யை
தொகுதி,சேமிப்பு களம் போன்றவற்றை குறிப்பிடலாம் .

இந்த லிஸ்டில் அவர் கண்டுபிடித்த பொருட்கள் 1093 . மிக நீண்ட லிஸ்ட் . நேரமிருந்தால் பாருங்கள் . இதை அழுத்துகஇதை அழுத்துக

இவரது
இந்த முயற்ச்சியாலே வாழ்க்கை முறைகள் பெருகி மின்சக்தியின் பாவனை
முக்கியத்துவம் தெரிந்தது .புதிய வாழ்க்கை முறை அமையும் விதத்தில்
மின்சாரத்தை மனித வாழ்க்கையோடு சேர்த்தவர் எடிசன் தான் ....

No comments:

Post a Comment

THANK YOU