Thursday, 19 June 2014

மென்பொருள் மற்றும் இன்டர்நெட் இல்லாமல் எல்லாத வித பைல்களையும் எளிதில் PDF ஆக மாற்றுவது எப்படி ? pdf converter

நாம் உருவாக்கிய ஆக்கங்களை PDF ஆக மாற்றுவதற்க நமக்கு சில நேரங்களில் சிரமமாக இருக்கும். உதாரணமாக word அல்லாத மற்ற பைல்களை நாம் PDF ஆக மாற்றவிரும்பினால் அதற்குரிய மென்பொருளை தேட வேண்டியிருக்கும். பிறகு வேறு ஒரு format file ஐ PDF ஆக மாற்றி வேறு ஒரு மென்பொருள் தேட வேண்டியிருக்கும்.
PDF convert  வகையை சார்ந்த மென்பொருளை (software) பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும். ஆனால் PDF writer என்ற அடிப்படையிலான மென்பொருளை (software) பயன்படுத்தினால் மேற்கண்ட பிரச்சனை இருக்காது.
இதில் எந்த டாக்குமெண்டையும் எளிதில் PDF ஆக மாற்றிக் கொள்ளலாம். அது என்ன format ஆக இருந்தாலும் சரி.
தாங்கள் விரும்பும் File ஐ PDF ஆக மாற்ற எந்த தனிப்பட்ட மென்பொருளையும் நீங்கள் திறக்கத் தேவையில்லை. மேலும் இன்டர்நெட் போன்றவற்றை பயன்படுத்த தேவையில்லை.
நாம் வேலை செய்து கொண்டிருக்கும் Application னிலேயே அந்த file ஐ PDF ஆக மாற்றிக் கொள்ளலாம்.
உதாரணமாக adobe photoshop ல் நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தால் அந்த file ஐ adobe photoshop லியே PDF ஆக மாற்றிக் கொள்ளலாம். (அதில் அந்த வசதி இல்லை என்றாலும்) இதற்கென தனியாக எ்நத மென்பொளுக்கோ இணையளத்திற்கு செல்லத் தேவையில்லை. (இதை தான் நாம் தலைப்பில் குறிப்பிட்டுள்ளோம்)
இது தான் PDF writer வகையை சார்ந்த மென்பொருளின் சிறப்பு அம்சம். இந்த வகையை சார்ந்த CUtePDF writer என்ற மென்பொருளை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து கொண்டால் இந்த வசதியை தாங்கள் பெற முடியும். இந்த மென்பொருள் தானாக உங்கள் கணிணியில் CutePD Writer என்ற பெயரில் ஒரு Printer உருவாக்கும். (உங்கள் பிரிண்ட்ரை இன்ஸ்டால் செய்தால் வருமே அது போன்று)
பிறகு நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் application ல் Print ஐ கொடுத்து உங்கள் பிரண்ட்ருக்கு பதிலாக PDF Printer தேர்வு செய்தால் போதும் உங்கள் document PDF ஆக மாறி உங்கள் கணிணியில் save ஆகவிடும்.
PDF writer
இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் . பின் வரும் இணைப்பில் உள்ள இது இயங்குவதற்குத் தேவையான இரண்டு மென்பொருளை உங்கள் கணிணில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
http://www.cutepdf.com/download/CuteWriter.exe
http://www.cutepdf.com/download/converter.exe
இனிமேல் எந்த பைலாக இருந்தாலும் அந்த File ஐ PDF ஆக மாற்ற நீங்கள் சிரமப்படத் தேவையில்…
GURU

No comments:

Post a Comment

THANK YOU