Thursday 19 June 2014

சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டுபிடிப்பு

சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டுபிடிப்பு
ser
லண்டன்: உலகிலேயே முதல் முறையாக சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான எக்ஸ்ரே ஒளியை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் 50 மில்லியன் ஆண்டு பழமையான தாவர படிமங்களையும் துல்லியமாக படம் பிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். 

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள பிரிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் டயமண்ட் லைட் சோர்ஸ் நிறுவனம் இணைந்து அதிக பிரகாசமுள்ள ஒளி பற்றி ஆய்வு செய்தன. அதில் சூரிய ஒளியை விட பல மடங்கு அதிக பிரகாசமாக ஒளிரும் எக்ஸ்ரே கதிர்களை கண்டுபிடித்துள்ளன. 

இது லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய படிமங்களையும் இந்த எக்ஸ்ரே ஒளிக்கதிர்கள் மூலம் துல்லியமாக ஆராய முடியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தாவரத்துக்கும் அதே இனத்தை சேர்ந்த தற்போதைய தாவரத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள், ரசாயன குணங்கள், அவற்றால் ஏற்படும் மாறுபாடுகள் குறித்து இந்த புதிய எக்ஸ்ரே கதிர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானி பில் மேனிங் கூறுகிறார்.

No comments:

Post a Comment

THANK YOU