Thursday 21 June 2012

தெரிந்து கொள்வோமே !!! - அபிஷேகம், விபூதி மற்றும் பூஜை விபூதி 4 வகைப்படும்.

மக்களே! இப்பதிவில் பூஜை,அபிஷேகம் பற்றிய கேள்விகளைப் பார்ப்போம்.
1. இறைவனுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
2.இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
3.இறைவனுக்கு மாம்பழ அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
4.இறைவனுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
5.இறைவனுக்கு எண்ணெய் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
6.இறைவனுக்கு வெண்தாமரை பூவால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
7.இறைவனுக்கு அரளிப் பூவால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
8.இறைவனுக்கு மருக்கொழுந்து பூவால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
9. விபூதி எத்தனை வகைப்படும்? என்னென்ன?
10. ஸ்வார்த்த, பரார்த்த பூஜை எனபது என்ன?

பதிலகள்:
1. நீடிய வாழ்வு
2. ஆயுள் விருத்தி
3. சந்தான பாக்யம்
4. ஐஸ்வர்யம்/ இலட்சுமி கடாக்ஷம்
5. வாழ்வில் ஒளி/நன்மை ஏற்படும்
6. மனசஞ்சலம் தீரும்/ கல்வி கேள்வி பெருகும்
7. திருமணம் நடைபெரும்
8. சுகபோகம் தரும்/கல்வி செல்வம் பெருகும்
9. விபூதி 4 வகைப்படும்.
கற்பம் அநுகற்பம் உபகற்பம் அகற்பம்
கற்பம், அனுகற்பம், உபகற்பம், அகற்பம் என விபூதி நான்கு வகைப்படும். அவற்றுள், நோயில்லாததாயும், கன்றுடன் கூடியதாயுமுள்ள பசுவைப் பூசித்து, அந்தப் பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது ஆகாயத்திலிருக்கும் பொழுதே யெடுத் பிண்டமாகச் செய்து உலர்த்திப் பஞ்சப்பிரமமந்திரங்களால் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப் பெற்ற விபூதியு அக்கினிஹோத்திரத்திலுண்டான விபூதியுமாகிய இந்த இரண்டும் கற்பமெனப்படும்.
வனத்தில் உள்ள உலர்ந்த சாணத்தை யெடுத்துச் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப்பெற்ற விபூதி அனுகற்பமெனப்படும்.
வனத்திலுள்ள வீட்டிலாவது பசுக்கட்டுமிடத்திலாவது செங்கற்சூளையிலாவது உள்ள காட்டுத் தீ முதலியவற்றால் தகனஞ் செய்யப்பட்ட விபூதியையெடுத்து வஸ்திரத்தால் சுத்தி செய்து கோசலத்தால் பிண்டஞ்செய்து மீண்டும் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து மூலமந்திரத்தால் சுத்தி செய்யப்பெற்ற விபூதி உபகற்பமெனப்படும்.
மந்திரம் முதலியவையின்றிப் பிராமணராலாவது, பெண்கள் சூத்திரர் முதலியவர்களாலாவது, சுத்தமானவிடத்திலுள்ள கோமயத்தை எடுத்துச் சேகரிக்கப்படடதும், வேதாத்தியயனத்துடன் அக்கினி காரியஞ் செய்கிறவர்களுடைய வீட்டிலுள்ள அடுப்பு முதலியவற்றினின்று எடுக்கப்பட்டதும் அகற்பமெனப்படும். http://www.shaivam.org/tamil/sta_sivarcana_candrikai_u.htm

10. தனக்கென்று செய்யப்படும் பூஜை - ஸ்வார்த்த பூஜை

உலக நலனுக்காக செய்யப்படும் பூஜை - பரார்த்த பூஜை
தொடரும்

No comments:

Post a Comment

THANK YOU