கி.மு. 3114 ஆகஸ்ட் 11 அன்று தொடங்கிய 13-ம் பக்தூன் முடிவு. அதுவே உலக
முடிவாம். சில்வேனஸ் மோர்லி எழுதிய "பழங்கால மாயர்கள்' எனும் ஆங்கில நூலின்
1983-ம் ஆண்டு திருத்திய நான்காம் பதிப்பின் சாரம் இது. உண்மையில்,
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 குளிர் சந்தி நாளில் பூமியை ஒருபக்கம்
பால்வீதி அண்ட மையமும், சூரியனும் நேர்கோட்டில் இணைந்து வடம் பிடிக்கும்.
மறுபக்கம் சந்திரன் மட்டும் தனித்து இழுக்கும். இந்த நிறையீர்ப்பு
இழுபறியில் பூமியின் மேல்தோல் பிய்த்துக்கொள்ளலாம். நிலத்தில் பூகம்பம்
நிகழும்.
அவ்வப்போது உள்புண் சீழ் மாதிரி எரிமலைச் சீற்றங்களும்
ஏற்படலாம். அமெரிக்காவின் மஞ்சள்கல் தேசியப் பூங்கா, கொலொராடோவில் லா கரிதா
கல்தேரா, நியூசிலாந்தில் தௌப்போ ஏரி, சுமத்ராவில் தோபா ஏரி எல்லாம்
குமுறுவதற்கு தருணம் பார்த்துக் காத்து இருக்கின்றன என்கிறார்கள். ஆழிப்
பேரலை பீறிடும்.
காற்றும் வந்து "தானே' தாண்டவம் ஆடும்
கவிஞர் செல்வா நிலம், நீர், காற்று மட்டுமா, சூரிய நெருப்பும் பூமியை
உக்கிரமாகத் தாக்கும். 1859-ம் ஆண்டு வெளிப்பட்டதைப்போல, இந்த ஆண்டும்
டிசம்பர் மாதத்தை ஒட்டி, சூரியனில் இருந்து அசாதாரண அணுப்புழுதிப் புயல்
வீசுமாம். அதில் சிதறுண்டு செயற்கைக்கோள், தொலைக்காட்சி அலைபரப்புகள்
அலைக்கழியும்.
வானில் அப்போஃபிஸ் எனும் குறுங்கோள் 2029-ம் ஆண்டு
பூமிக்கு அருகில் பூச்சாண்டி காட்ட இருக்கிறது. 2036 ஏப்ரல் 13 அன்று
மோதவும் கூடுமாம். ஒரு கோடி கோடி டன்கள் "ட்ரை நைட்ரோ டொலுவீன்'
வெடிபொருளுக்குச் சமமான சேதம் உண்டாகலாம். ஏறத்தாழ 1980-ம் ஆண்டின் ஹெலீனா
எரிமலைச் சீற்றத்தைப்போல் 60 லட்சம் மடங்கு.
அடுத்த தேர்தலே
வராதா, இலவசத் தவணைகளில் "இந்தியா விற்பனைக்கு' என்ற விளம்பரப் பலகை
தொங்கவிட அவகாசம் கிடைக்காதா, சுவிஸ் வங்கியும் கூண்டோடு அழியுமோ என்ற
கவலைகள் மகாராஜா குடும்பங்களுக்கு. புறநகர்களில் வளைத்துப் போட்ட நிலங்கள்
என்னவாகும் என்ற அதிர்ச்சி சிற்றரசர் வாரிசுகளுக்கு. விபத்தில் சிதைந்த
கழிவுகள், போரில் தகர்ந்த அழிவுகள் பார்த்துப் பயந்தவர்கள் இருக்கிறார்கள்.
அவர்களிடம் நடுவீட்டுக் கழிவறைப் பாதுகாப்பை யார் வந்து சொன்னாலும்,
குழாய்க்குள் தலையை நுழைத்துக் கழிவுகள் என்ன ஆகிறது என்று கண்டே தீர
வேண்டும் என்கிற அக்கறை சிலருக்கு.
விவிலியக் கணிப்புப்படி,
""அந்நாட்களின் வேதனைக்குப் பின், உடனே, கதிரவன் இருண்டு விடுவான்; நிலா
தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்தினின்று விழும்'' என்கிற (மத்தேயு 24 :
29) வசனம் வாசித்துப் பீதியைக் கிளப்புகிறார்கள். போகிற போக்கில் 12-21-12
(மாதம் - நாள் - ஆண்டு) என்றபடி ஹீப்ரு மொழியில் எழுத்துக்களை இட, வலமாகக்
கூட்டி வாசிக்கிறார்கள்
கவிஞர் செல்வா நிலம், நீர், காற்று மட்டுமா, சூரிய நெருப்பும் பூமியை உக்கிரமாகத் தாக்கும். 1859-ம் ஆண்டு வெளிப்பட்டதைப்போல, இந்த ஆண்டும் டிசம்பர் மாதத்தை ஒட்டி, சூரியனில் இருந்து அசாதாரண அணுப்புழுதிப் புயல் வீசுமாம். அதில் சிதறுண்டு செயற்கைக்கோள், தொலைக்காட்சி அலைபரப்புகள் அலைக்கழியும்.
வானில் அப்போஃபிஸ் எனும் குறுங்கோள் 2029-ம் ஆண்டு பூமிக்கு அருகில் பூச்சாண்டி காட்ட இருக்கிறது. 2036 ஏப்ரல் 13 அன்று மோதவும் கூடுமாம். ஒரு கோடி கோடி டன்கள் "ட்ரை நைட்ரோ டொலுவீன்' வெடிபொருளுக்குச் சமமான சேதம் உண்டாகலாம். ஏறத்தாழ 1980-ம் ஆண்டின் ஹெலீனா எரிமலைச் சீற்றத்தைப்போல் 60 லட்சம் மடங்கு.
அடுத்த தேர்தலே வராதா, இலவசத் தவணைகளில் "இந்தியா விற்பனைக்கு' என்ற விளம்பரப் பலகை தொங்கவிட அவகாசம் கிடைக்காதா, சுவிஸ் வங்கியும் கூண்டோடு அழியுமோ என்ற கவலைகள் மகாராஜா குடும்பங்களுக்கு. புறநகர்களில் வளைத்துப் போட்ட நிலங்கள் என்னவாகும் என்ற அதிர்ச்சி சிற்றரசர் வாரிசுகளுக்கு. விபத்தில் சிதைந்த கழிவுகள், போரில் தகர்ந்த அழிவுகள் பார்த்துப் பயந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நடுவீட்டுக் கழிவறைப் பாதுகாப்பை யார் வந்து சொன்னாலும், குழாய்க்குள் தலையை நுழைத்துக் கழிவுகள் என்ன ஆகிறது என்று கண்டே தீர வேண்டும் என்கிற அக்கறை சிலருக்கு.
விவிலியக் கணிப்புப்படி, ""அந்நாட்களின் வேதனைக்குப் பின், உடனே, கதிரவன் இருண்டு விடுவான்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்தினின்று விழும்'' என்கிற (மத்தேயு 24 : 29) வசனம் வாசித்துப் பீதியைக் கிளப்புகிறார்கள். போகிற போக்கில் 12-21-12 (மாதம் - நாள் - ஆண்டு) என்றபடி ஹீப்ரு மொழியில் எழுத்துக்களை இட, வலமாகக் கூட்டி வாசிக்கிறார்கள்
No comments:
Post a Comment
THANK YOU