Saturday, 8 December 2012

பேஸ்புக் - (ஜக்)கர்(நெட்)வொர்க்




"ன்னை தேடி பேஷன்ட் யாரும் வந்தால் ரிசப்ஷனிஸ்ட் என்னிடம் தகவல் கூற வேண்டும் ஆனால் சத்தம் போட்டு ஊரையே கூப்பிடக்கூடாது , உன்னால் முடியுமா?, உன்னிடம் ஏதேனும் வழி இருக்கிறதா", எட்வர்ட் மார்கிடம் தனது பிரச்சனையைக் விளக்கிக் கொண்டிருந்தார்.

"து தான் உங்க பிரச்சனையா, இதற்காகத் தான் இவ்ளோ கவலைப்படுறீங்களா", மார்க் சிரித்துக் கொண்டே கேட்டான். எட்வர்ட் எதுவும் கூறமால் அமைதியாக மார்க்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார், மார்க் தொடர்ந்தான்.
"வீட்டில் இருக்கும் உங்க கம்ப்யூட்டரையும், ரிசப்சனிஸ்ட் கம்ப்யூட்டரையும் கனெக்ட் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்க மத்த விசயத்த நான் பார்த்துக்குறேன்"

மார்க் கூறியது முதலில் எட்வர்டிற்குப் புரியவில்லை, ஒருவித குழப்பத்துடன் தன வீட்டில் இருக்கும் அனைத்துக் கணினிகளையும் இணைக்கும் வேலைகளை ஆரம்பித்தார். இந்நேரத்தில் மார்க்கும் தான் மேற்கொண்டிருந்த வேலையை வெற்றிகரமாக முடித்திருந்தான். மார்க் செய்த செயல் சாதாரண விஷயம் இல்லை, அவனது பதினோரு வயதில் தனது தந்தைக்காக மென்பொருள் ஒன்றை வடிவமைத்து இருந்தான். அந்த மென்பொருள் மூலம் தன் வீட்டில் இருக்கும் அத்தனை கம்ப்யூட்டருடனும் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும் என்பதே அதன் சிறப்பம்சம்.

"டாக்டர் இசட் உங்கள தேடி பேசன்ட் வந்த்ருகாங்க உடனே வரவும்" என்ற ரிசப்ஷனிஸ்டின் தகவலை தனது கணினியில் பார்த்ததும் எட்வர்டால் அந்த சிறுவனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. மார்க் தான் கண்டுபிடித்திருந்த அந்த மென்பொருளுக்கு வாய்த்த பெயர் ZUCKNET. மார்க்கின் முதல் மற்றும் முக்கியமான கண்டுபிடிப்பு, இதன் பின் தான் மார்க்கின் திறமை மீது முழு நம்பிக்கை வந்ததாக அவரது சகோதரி ராண்டி பெருமையுடன் குறிப்பிடுகிறார். ZUCKNET இன் வருகைக்குப் பின் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அதன் மூலமே தகவல் பரமாரிக் கொண்டனர்.
 
மார்க்கின் குடும்பம் மிகப் பெரிய குடும்பமோ அல்லது பணக்காரக் குடும்பமோ கிடையாது, மத்தியதரக் குடும்பம். இருந்தும் மார்கிற்குக் கணினி மீதிருந்த ஈடுபாடு குறைந்துவிடக் கூடாது, மேலும் மேலும் அவனது திறமை வளர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்ட அவனது பெற்றோர் எட்வர்டும் கேரனும் அவனுக்கு சிறப்பான கல்வி கிடைக்கப் பெற  வேண்டும் என்று  முடிவு செய்திருந்தனர். குடும்பம் கஷ்டபட்டாலும் பரவாயில்லை மார்க்கிற்கு நல்ல தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று நினைத்தனர். அவர்கள் வீட்டின் அருகில் மெர்சி என்னும் கல்லூரி இருந்தது, அதில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் கணினி வகுப்புகள் நடைபெறும் என்பதை எட்வர்ட் கேள்விபட்டிருந்ததால், மார்க்கை அந்த கல்லூரியில் சேர்ப்பதற்காக அழைத்துச் சென்றார். 

குப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது, எட்வர்ட் தனது மகனுடன் வகுப்பினுள் நுழைந்த நேரம், பாடம் நடத்திக் கொண்டிருந்த ப்ரோபசர் எட்வர்டை நோக்கி,  
" ஹலோ மிஸ்டர், கிளாஸ்க்கு வாறதா இருந்தா நீங்க மட்டும் தனியா வரணும், கூட ஏன் சின்ன பையன எல்லாம் கூட்டிட்டு வாறீங்க, மொதல்ல அவன போய் வீட்டில விட்டுட்டு வாங்க" 

ட்வர்ட அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே, " ஹலோ ப்ரோபசர், ஸ்டுடென்ட் நான் இல்ல, இதோ நிக்ரானே என் பையன் மார்க் அவன் தான் ஸ்டுடென்ட், நான் சும்மா அவன் கூட வந்தேன், நான் வேணா வெளியில இருக்கேன்" என்று கூறிவிட்டு அறையை விட்டு அகன்றார். தன பையனைப் பற்றி பெருமையாகக் குறிப்பிடும் தருணங்களில் இந்த நிகழ்வை மிக முக்கியமான ஒன்றாக கருதுகிறார் எட்வர்ட். 


னது வீட்டின் அருகில் இருக்கும் அர்ட்ஸ்லீ என்னும் சாதரான பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மார்க்கை பிலிப் எக்ஸ்ட்டர் அகாடெமி என்னும் மிகப் பெரிய பள்ளியில் சேர்த்தார். பள்ளி சிறியதோ பெரியதோ அதைப் பற்றி எல்லாம் மார்க் கவலைப்படுவதே கிடையாது, தான் கற்கும் பாடங்களை முறையாக படிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனது குறிக்கோள். பிலிப் எக்ஸ்ட்டர் அகாடெமியில் அணைத்து பாடங்களிலும் மார்க் முதன்மையான மாணவனாக திகழ்ந்தான், பழங்கால மொழிகளைக் கற்பதில் மார்க்கிற்கு அலாதி ஆர்வம், ஆங்கிலம் தவிர மார்க்கிற்கு பிரெஞ்சு, ஹீப்ரு, லத்தீன், கிரேக் போன்ற மொழிகள் தெரியும் (தற்போது தனது காதல் மனைவிக்காக சீன மொழியிலும் புலமை பெற்று வருகிறார்). மேலும் கணிதம் ஜோதிடம் மற்றும் இயற்பியல் பாடங்களில் அதிக மதிப்பெண் வாங்கியதற்காக பரிசுகளும் பெற்றுள்ளார்.

டிப்பு தவிர்த்து விளையாட்டுகளிலும் மார்க்கிற்கு ஆர்வம் அதிகம். பென்சிங் எனும் வாட்போர் விளையாட்டில் அவரது பள்ளியின் பென்சிங் அணி  கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.  

பிலிப் எக்ஸ்ட்டர் அகாடெமியின் இறுதி ஆண்டில் ஒவ்வொரு மாணவரும் ப்ராஜெக்ட் செய்ய வேண்டும், தனியாகவோ அல்லது இரண்டு மூன்று பேர் சேர்ந்த குழுவாகவோ இணைந்து செய்யலாம், மார்க் தனது நண்பன் ஒருவருடன் சேர்ந்து செய்ய முடிவு செய்தார், அந்த ப்ராஜெக்ட் அமெரிக்க இசை உலகையே ஆச்சரியப்பட வைத்தது, மைக்ரோசாப்ட் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் பல லட்சம் டாலர்கள் கொடுத்து அந்த ப்ரொஜெக்ட்டையும் மார்க்கையும் விலை கொடுத்து வாங்கப் பார்த்தனர்.

No comments:

Post a Comment

THANK YOU