நாம் பெரும்பாலும் அருகம்புல்லை பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால் அதன்
மருத்துவ குணம் அறிந்து உடல் ஆரோக்கியம் காக்கப் பயன்படுத்துகிறோமா என்பது
கேள்விக்குறி.
பல்வேறு ஊட்டச்சத்து பானங்களைப் பருகும் நமக்கு, அருகம்புல்லே அருமையான ஊட்டச்சத்து மூலிகை என்ற உண்மை தெரியவில்லை.
நல்ல தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, சுத்தமாக நீரில் கழுவி, நைய அரைத்து
பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி, இரவில் படுக்கச் செல்லும்முன்
சாப்பிட்டு வந்தால், பலவீனமான உடல் நன்கு தேறி, நல்ல பலம் பெறும். வளரும்
குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்துப் பெற இதே முறையைக் கையாளலாம்.
அருகம்புல்லை நீரில் இட்டு நன்கு காய்ச்சி, அந்த நீரைப் பதமான சூட்டில் பருகி வந்தால் இதயத்துக்கு நலம் அளிக்கும்.
No comments:
Post a Comment
THANK YOU