இந்த வைகாசி மாத அமாவாசை 20.5.12 ஞாயிறு அன்றும்,சூரியக்கிரகணம்
21.5.12 திங்கட் கிழமை விடிகாலை(ஞாயிறு நள்ளிரவு) 2.26க்குத் துவங்குகிறது;அப்படித்
துவங்கும் சூரியக்கிரகணம் காலை 8.19க்கு நிறைவடைகிறது.நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற
நேரம்(முழு சூரியக்கிரகணம் உண்டாகும் நேரம்) திங்கட்கிழமை விடிகாலை 3.36 முதல் காலை
7.09 வரையிலான நேரம் ஆகும்.இந்த நேரத்தில் குறைந்த பட்சம் 30 நிமிடமும்,அதிகபட்சம்
ஒரு மணி நேரமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.
அபூர்வமான சூரியக்கிரகண நேரத்தை நாம் பயன்படுத்தி,நமது கர்மவினைகளை போக்குவோம்;இப்படி
குறிப்பிட்ட நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதால்,நமது கஷ்டங்கள் நீங்குவதோடு,நமது வருமான
அளவு உயரும்;நமது நீண்டகால ஏக்கங்கள் தீரும்;நமது ஆத்ம பலம் அதிகரிக்கும்;நமது முன்னோர்களில்
ஏழு தலைமுறை வரை(நமது அம்மா,அப்பா அவர்களின் அம்மா,அப்பாக்கள் என்று ஏழு தலைமுறை) கதிமோட்சம்
உண்டாகும்.
நமது குழந்தைகளுக்கும்,அவர்களின் குழந்தைகளுக்கும் சேர்தே நாம் ஆத்ம
பலத்தைச் சேமிக்கிறோம்.
No comments:
Post a Comment
THANK YOU