Sunday, 27 May 2012

சித்தர்கள் & சிவபெருமானின் பூமி சதுரகிரி


சதுரகிரி மலை:சிவபெருமானும் சித்தர்களும் வாழுமிடம்

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது.இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது.இதுதான் சதுரகிரியின் நுழைவாசல்.இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது.பாதை கரடு முரடானது)பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.

பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.இது பற்றி ஏற்கனவே சக்தி விகடன் இதழில் 60 வாரங்கள் தொடர் வந்து விட்டது.அத்தொடர் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.இப்போது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தினத்தந்தி தினசரியின் இலவச இணைப்பான ஆன்மீக மலரில் அதிசய சித்தர்கள் என்ற தொடரில் சதுரகிரியில் நடக்கும் அதிசயங்களை கதை வடிவில் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர்.அக்கதையை ஹனுமத்தாஸன் அவர்கள் கூறிவருகிறார்.
படித்தீர்கள் எனில் பிரமித்துப்போய்விடுவீர்கள்.
சதுரகிரிஸ்ரீசுந்தரமகாலிங்கத்துக்கு அரோகரா!!! SIVA SIVA     GURU

No comments:

Post a Comment

THANK YOU