Wednesday, 8 May 2013

தன்னம்பிக்கை கவிதைகள்

நான் ஒன்றும் வசதியானவன் அல்ல ..
மாற்று உடையின்றி மாறி மாறி ...
ஒரே உடையை மாறி மாறி ...
போடும் வசதியான குடும்பம் ...
கிழிந்த காட்சட்டையை ...
ஒழித்து ஒழித்து போட்டவன் நான் ...
என் அருமை தோழிகள் முன்னே வரும் போது ..
கிழிந்த பின்புறத்தை மறைக்க ...
ஸ்ரைல் மன்னன் போல் ...
சுவரோடு நிற்பேன் ...
கிழிந்தது என் ஆடைகளே அன்றி ..
தன்னம்பிக்கையல்ல ...!

அம்மாவுக்கு பொய் சொன்னதை தவிர ...
வீட்டு வேலைசெய்யாத போது ஆசிரியருக்கு ...
பொய் சொன்னதை தவிர ...!!!
நண்பர்களுக்கு காதலை மறைத்ததை தவிர ..
காதலிக்கு இடையிடையே ...
பொய் சொன்னதை தவிர ...!!!
நான் யாருக்குமே பொய் சொல்லேலங்க...
உண்மையா என்னை நம்புங்க ...
இப்படித்தான் அரிச்சந்திரனாக வாழுகிறேன் ..!!!!!

நீ சொல்லாவிட்டால் என்ன ...?
நான் அருகில் வரும் போது ஓடி ஒழிக்கிறாய் ..
கூட்டமாய் வரும் போது ஆட்கழுக்குள் மறைகிறாய்
தூரத்தில் நின்று திரும்பிப்பார்க்கிறாய் ....
முன்பைவிட இப்போது தனியாய் வருகிறாய் ..
அடிக்கடி இப்போ திரும்பி பார்க்கிறாய் ..
நீ என்ன செய்தாலும் நான் உன்னை ...
விரும்புகிறேன் என்று சொல்லமாட்டேன் ..!!!
இன்னும் இன்னும் தவிக்க
வேண்டும் நீயும் நானும்..!!!

இந்தியன்

இந்தியன் என்று அறிவிக்கிறது !
தேசம்.
இந்து என்று அடையாளப்படுத்துகிறது !
மதம்.
மொழி!
தமிழனாய் பார்க்கிறது.
இப்படி..,
சாதி,
ஊர்,
தெரு,
குடும்பம்
என தொடங்கி முகநூல் முடிய
அறிவித்த படியே கடக்கின்றனர்.
அவரவர் விரும்புவதை.
ஏனோ?
எல்லோரும் உணர மறுக்கிறார்கள்.
நான்
மனிதனாக இருக்கவேண்டிய
அவசியத்தை!.

யார் யாரோ என்னை குழப்புவதாக நான் நினைத்ததுண்டு.

மனமெனும் குரங்கு மடைப்பயலே!!!

 யார் யாரோ என்னை  குழப்புவதாக நான் நினைத்ததுண்டு.. ஆனால் பிறகுதான் உணர்ந்து கொண்டேன். என் மனமே அந்த குழப்பவாதி என்று. இது செய்யும் சேட்டைகள் என்ன வென்று சொல்வது. அதனோட calculations per minute எவ்வளவு என்றே சொல்லமுடியாது. அந்த அளவுக்கு கணக்கு போட கூடியது. நான் மகரிஷி ரமணர் கூறியது போல ஆன்ம விசாரம் செய்ய தொடங்கினேன். மெதுவாக நான் யார் என புரிய ஆரம்பித்தது. அவர் கூறியது போல நான் யார் என கண்ணை மூடி என் மனதினிலே தேட ஆரம்பிதேன் . அதன் தீவிரம் அதிகமாகிய போது  உலகத்தையும், என்னை சுற்றியும், நான் செய்யும் செயல்களை கூட பார்த்து கொண்டு மட்டுமே இருப்பதை போலவும் தோன்றியது. ஆனால் அவ்வாறு பார்க்கும் போது மனம் உடனே  எண்ண அலைகளில் இழுக்க தொடங்கும். உடனே மறுபடியும் நான் யார் என தேட தொடங்குவேன், ' நான்'  என்னையே  பார்ப்பது போல தோன்றும் .ஆனால்  உண்மையில் உள்ளது நான் ஒன்றே .அப்போது நான் பார்ப்பதாக  தோன்றும் 'நான்' உண்மை அல்ல . அது மனத்தின் மாயை. உடனே பார்பதாக தோன்றும் 'நான் ' இல் கவனத்தை வைப்பேன். அப்போது இன்னொரு நான் இந்த நான்-ஐ பார்பதாக தோன்றும். இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது நான் என்பதே ஆன்மாவில் ஒடுங்கி ஆன்மம் ஸ்வயம் பிரகாசமாக ஒளிரும் என ரமணர் கூறுகிறார் . இந்த அனுபவம்எனக்கு  ஒரு சில செகண்ட்ஸ்  தோன்றியது போல தெரிந்தது.ரமணரின் அருளால் இந்த பாக்கியம் கிடைக்க பெற்றது.
              மூச்சு காற்று உள்ளே இழுக்கும்போது மனமானது செயல் படுவது போல தோன்றுகிறது . அதனால் பிராணனே எண்ணங்களை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. 

காலத்தைக் கட்டமைக்கும் மனம்


              யஜுர் வேதத்தில் இருக்கும் சிவ சங்கல்ப செய்யுள்களில் வேத ரிஷி வெளிப்படுத்தும் அகவெளி கண்டடைதல்கள் வியப்புக்குரியவை. ஏனெனில் ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக இவை எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இதை எழுதியவர்கள் மனதை குறித்து அதன் இயக்கம் குறித்து சிந்தித்திருக்கிறார்கள். அதனை விளக்க முற்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கும் உளவியல் கேட்கும் சில ஆழமான கேள்விகளைக் அன்றே கேட்டிருக்கிறார்கள். அதற்கான விடைகளைத் தேடியிருக்கிறார்கள். அவர்கள் முன்னகர்வதற்கான வழிகளை நமக்காக காட்டியவர்கள் இந்த வேத பாடலின் அடுத்த பகுதிகள் எந்த நவீன உளவியலாளனையும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்வதாக அமைகின்றன:
கடந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகியவற்றை மனதே இணைக்கிறது. ஐம்புலன்கள் மற்றும் உள்ளிழுத்தல், வெளிவிடுதல் ஆகிய சுவாசங்கள் என ஏழு வேள்வியாளர்கள் மூலமாக அது இயங்குகிறது. அந்த மனம் மங்களகரமான சங்கல்பத்துடன் இருக்கட்டும்.
காலத்துக்கும் மனதிற்குமான தொடர்பு இங்கு பேசப்படுகிறது. காலத்தின் ஓட்டத்தில் நமக்கு ஏற்படும் அனுபவங்களை ஒன்று படுத்தி நமக்கு மனமே அளிக்கிறது. காலம் குறித்த நமது உணர்வினை மனமே கட்டமைக்கிறது. இது நமக்கு அதிசயமாக இருக்கலாம். காலம் என்பது புறவயமாக நிகழ்கிற ஒன்றல்லவா? அப்போது காலத்தை எப்படி மனம் கட்டமைக்க முடியும்?
பெஞ்சமின் லிபெட் ஒரு நரம்பியல் ஆராய்ச்சியாளர். 1960-களில் தொடங்கி இவர் செய்த பரிசோதனைகள் நரம்பியல் மட்டுமல்லாது பிரக்ஞை குறித்த நமது அறிதல்களில் முக்கிய இடம் வகிக்கின்றன. அறுவை சிகிச்சை காரணங்களுக்காக மூளையின் மேல்பகுதி திறக்கப்பட்ட நோயாளிகளிடம் அவர்களின் சம்மதத்துடன் இப்பரிசோதனைகளை லிபெட் மேற்கொண்டார். மூளையின் மேற்பரப்பின் ஒவ்வொரு பகுதியும் உடலின் ஒவ்வொரு பகுதியின் புலனுணர்வுடன் தொடர்புடையது என்பது அனைவருக்கும் தெரியும். இப்பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்காந்த தூண்டுதல்களை லிபெட் அளித்தார். இவ்வாறு அளிக்கும் போது நோயாளிகள் தங்கள் உடலில் குறிப்பிட்ட பகுதிகள் தொடப்படுவதை போல உணர்ந்தனர். உதாரணமாக மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மின்காந்த தூண்டுதல் அளிக்கப்பட்டால் ‘ஆ என் இடது கையில் ஏதோ தொடுற மாதிரியே இருக்குதே’.
இதில் ஒரு முக்கிய விஷயத்தை லிபெட் கண்டுபிடித்தார். இந்த மின்காந்த தூண்டுதல் எவ்வளவு நேரம் அளிக்கப்படுகிறது என்பதுதான் அந்த தூண்டுதலின் விளைவை ஒரு நபர் தன் தண்ணுணர்வில் உணருவதை நிர்ணயிக்கிறது. ஒரு சில மில்லி விநாடிகளில் ஆரம்பித்து ஒரு முழு விநாடி வரையாக பல கால அவகாசங்கள் கொண்டவையாக இந்த மின்காந்த தூண்டுதல்களை அவர் அளித்தார். முழுதாக அரை விநாடி அளிக்கப்படும் தூண்டுதலே ‘எனக்கு தொடுற மாதிரி இருக்கே’ என்பதை ஒருவருக்கு ஏற்படுத்துகிறது என அவர் கண்டுபிடித்தார். எந்த ஒரு புலன் தூண்டுதலும் அரை விநாடிக்காவது உங்கள் நியூரான்களில் தொடர் இயக்கமாக அமைந்து மூளையை அடைந்தால்தான் அது புலனுணர்வாக ‘நான் அனுபவிக்கிறேன்’ ஆக மாறுகிறது. அரை விநாடி என்பது 500 மில்லி விநாடிகள்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால், நாம் உடலளவில் எதிர்கொள்ளும் புலன் தூண்டுதல்கள் ‘உடனடியாகவே’ உணரப்படுகின்றன. உடலில் ஒரு தொடுதலோ அல்லது எரிச்சலோ ஏற்படுத்தினால் 30 மில்லி விநாடிகளில் அது புலனுணர்வாக மாறி ‘நான் தொடப்படுகிறேனே’ என்று தன்னுணர்வு சொல்லிவிடுகிறது. ஆக என்ன நடக்கிறது இங்கே?
100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை எடுத்துக் கொள்வோம். துப்பாக்கி சுடப்பட்டு பந்தயம் ஆரம்பித்ததும் வீரர்கள் ஓட ஆரம்பிக்கிறார்கள். இது 100 மில்லி விநாடிகளுக்குள் தொடங்கிவிடுகிறது. ஆனால் 500 மில்லி விநாடிகளில்தான் அவர்களின் தன்னுணர்வு துப்பாக்கி சுடப்பட்டதை உணர்கிறது. அதாவது அவர்கள் ஓட்டத்தின் நடுவில் இருக்கும் போதுதான் துப்பாக்கி சுட்டது அவர்களின் பிரக்ஞையில் பதிகிறது. நீங்கள் வாகனத்தில் வரும் போது ஒரு நாய் குறுக்கே பாய்கிறது. நீங்கள் உடனடியாக பிரேக்கை அழுத்துகிறீர்கள் அல்லது பிடிக்கிறீர்கள். நாய் கடந்து சென்றுவிடுகிறது. ஆனால் அப்போதுதான் உண்மையில் உங்கள் தன்னுணர்வில் நடந்தவை எல்லாம் பதிவாகிறது. இதனை லிபெட் இப்படி விளக்குகிறார்: ஆம் நீங்கள் பிரேக்கை பிடித்ததும் சரி, அல்லது பந்தய வீரர்கள் ஓட ஆரம்பித்ததும் சரி, தன்னுணர்வு அற்ற நிலையில்தான். பின்னர் மனம் நீங்கள் உடனடியாக அந்த புலனுணர்வை பெற்றதாக – நடந்து முடிந்த பிறகு- கட்டமைக்கிறது. அதாவது உங்கள் செயல்களை இயக்கும் நியூரானிய இயக்கம் வேறு உங்கள் தன்னுணர்வு வேறு. தன்னுணர்வின் கால அனுபவம் செயல் நடந்த பின்னர் கட்டமைக்கப்படுகிறது. ஆம். கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மனதே இணைக்கிறது.

விதியை மதியால் வெல்ல முடியுமா?


                 விதியை மதியால் வெல்ல முடியுமா? எனக்கு நீண்ட நாளாக இந்த கேள்வி உள்ளது. எல்லோரும் பிறக்கிறோம், இறக்கிறோம். அது நம் கையில் இல்லை . ஆனால் வாழ்வது நம் கையிலே உள்ளது என நிறைய பேர் சொல்கின்றனர். அப்படி என்றால் அனைவரும் சந்தோசமாக தானே வாழ விரும்புவர். யாரேனும் துன்பத்துடன் வாழ விரும்புபவர் உண்டா இந்த உலகத்தில்?  ஆனால் உண்மையில் யாரும் சந்தோசமாக இருப்பதாக தெரியவில்லையே.அப்படி இருக்க விதியை மதியால் வெல்லலாம் என எப்படி கூறுவது. அந்த மதியும் ஒவ்வொருவருக்கும் எழுதப்பட்ட விதியினாலேயே தரப்பட்டு இருக்கிறது என்பது என் வாதம். தனக்கு கொடுக்கப்பட்ட சிறிது நம்பிக்கையை வைத்து  விதியை வென்று விட்டேன்  என கூறுவது எப்படி பொருந்தும்.
                அது சரி.. முதலில் விதி எது என்பதை எப்படி கண்டு பிடிப்பது. அதை வெல்வதாக கூறுவதற்கு. விதியாக ஒன்றை  நினைத்து அதை மாற்றி வென்றதாக கூறுவது உண்மையில் விதி அல்ல.அப்படி நினைப்பது எல்லாம் கடவுள் அமைத்த மென்பொருளால் என்றே எனக்கு தோன்றுகிறது. அவ்வாறு  நினைத்து வெல்ல வேண்டும் என்பதே விதியாக கடவுள் எழுதியது. இது எல்லாம் அகங்காரத்தின் விளையாட்டு. அதுதான் ஆட்டுவிக்கிறது. நான் என்பதை தோற்றுவிப்பதே அதுதான். விதியை வென்று விட்டதாக கூரவைப்பது கூட அதுதான். அதற்காக விதியே என சும்மா உட்கார்ந்து விட்டால் எல்லாம் நடந்து விடுமா என கேட்பீர்கள். சரி என உட்கார்ந்து பாருங்கள் அப்படி உங்கள் விதி விட்டால். ஆனால் சிறிது நேரத்தில் பசி எடுக்க ஆரம்பித்தால் அட போ பா பசிக்கிறது என எழுந்து ஓடி விடுவீர்கள். இறைவன் முன் கூட்டியே அவரவர் தலை எழுத்தை எழுதி விட்டான் என்பதே என் நம்பிக்கை என் விதியும் கூட. 
          சரி இதில் இருந்து என்னதான் கூற  வருகிறாய் என்பது உங்களுடைய அடுத்த கேள்வி..என் பதில் விதி வலியது.  இது மட்டுமே.
வள்ளலார் பாட்டு ஒன்று நியாபகம் வருகிறது.
         "  ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ வாட்டுகின்ற 
அஞ்சு புல வேடற்கு அறிவை பறிகொடுத்து 
என் நெஞ்சு புலர்ந்தோங்கு நிலை.  "
 ரமணரின் திரு வாய்மொழியும் கூட, 
"நடப்பது என்செயினும் நில்லாது 
நடவாதது என் செய்யினும் நடவாது 
அதனால் அமைதியாய் இருப்பது நன்று. "

நான் இதை எழுதிய பின் தற்செயலாக படித்த விதி பற்றிய கட்டுரை. இதையும் படிக்கவும் தமிழர்கள் விதியை நம்பாதவர்களா ?
                                                                                                                        GURU