Wednesday, 20 March 2013

உங்க பையன் அவங்க அம்மாவை மம்மின்னு கூப்பிடறான், சரி, உங்களை கம்மி-ன்னு கூப்பிடறானே, அது ஏன் சார் ? வீட்ல எனக்கு பவர் ரொம்ப கம்மியாம், அதான் குத்திக்காட்டுறான்


* உலக கோடீசுவரர்களில் முதலிடத்தல் உள்ள பில் கேட்ஸ் முதன் முதலில்
தொடங்கிய கம்பெனியின் பெயர் டிராபிக்-ஓ-டேடா என்பதாகும். இந்தக்
கம்பெனியின் வேலை என்ன தெரியுமா?... ஒரு குறிப்பிட்ட இடத்தில் எத்தனை
வாகனங்கள் கடந்து செல்கின்றன என்பதை கணக்கெடுப்பதுதான்.

* ஒவ்வொரு
நாட்டிற்கும் அதன் கடற்கரையிலிருந்து 12 மைல்கள் வரை அந்த நாட்டுக்குச்
சொந்தம். அதற்கு அப்பால் உள்ள கடலும், ஆழ்கடல் பகுதியும் உலகைச் சார்ந்தது.
இதை சர்வதேச சட்டப்படி எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதை மீறுவது
அந்தந்த நாட்டின் இறையாண்மையை மீறிய செயலாகும்.

* சுவிட்சர்லாந்து
நாட்டு வங்கிகளில் உள்ள கணக்கு பரம ரகசியமாக காக்கப்படுகிறது. தனி மனிதன்
ஒருவருடைய வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதனை எப்போதும் வெளியிடக்
கூடாது என்பது அந்நாட்டின் சட்டம். அதனால்தான் பிற நாட்டவரும் சுவீஸ்
நாட்டு வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

* இந்தியாவில் 1,25,000 கிராமங்களில் இன்னும் மின்சார வசதி கிடையாது.

* அமைதியின் சின்னம் புறா ஓவியம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதனை முதன்முதலில் வரைந்தவர் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ.

* நாளிதழ்களுடன் இலவச இணைப்பை முதன்முதலாக வழங்கிய ஏடு "தி நியூயார்க் டைம்ஸ்'.

* இந்தியாவில் 11 கோடி சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர்.

* இந்தியர்கள் விசா இல்லாமல் போகும் வெளிநாடு பூடான்.

* முதன்முதலில் ஆங்கில அகராதியைத் தயாரித்தவர் நோஹ்வெப்ஸ்டர் என்ற அமெரிக்கர்

* படகு போக்குவரத்து மட்டுமே நடைபெறும் நாடு லாவோஸ்.

* முகலாயப் பேரரசின் சக்ரவர்த்தியான ஷாஜஹான் தாஜ்மகாலை மட்டும் கட்டவில்லை. டெல்லியில் உள்ள செங்கோட்டையை கட்டியதும் அவர் தான்.

*
இந்தியாவில் ரூபாய் நாணயம் கி.பி. 16-ம் நூற்றாண்டில்தான் பழக்கத்திற்கு
வந்தது. இதை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் டில்லியை ஆண்ட `ஷெர்ஷா சூரி'
என்ற அரசர்.

* ராணுவ வீரர்களுக்கான சீருடை கி.பி.19-ம் நூற்றாண்டில் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.

*
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கைக்குலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவித்துக்
கொள்ளும் பழக்கம் முதன்முதலில் எகிப்து நாட்டில் தான் தோன்றியது.

No comments:

Post a Comment

THANK YOU