Wednesday, 20 March 2013

டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு இத நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்.

உலகிலேயே மூன்று நாடுகளில்தான் சந்தனமரங்கள் உள்ளன. அவை இந்தியா, இலங்கை,
பிலிப்பைன்ஸ் ஆகும். இவற்றுள் மிக அதிகப் பரப்பளவில் சந்தன மரங்கள்
இந்தியாவில்தான் உள்ளன.

* பாடல் வரிகள் இல்லாமல் ஒருவித இசையை மட்டுமே தேசிய கீதமாகக் கொண்ட நாடுகள் கத்தார், ஸ்பெயின், ஏமன்

*
ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கடற்கரையிலிருந்து 12 மைல்கள் வரை அந்த
நாட்டுக்குச் சொந்தம். அதற்கு அப்பால் உள்ள கடலும், ஆழ்கடல் பகுதியும்
உலகைச் சார்ந்தது. இதை சர்வதேச சட்டப்படி எல்லா நாடுகளும் ஏற்றுக்
கொண்டுள்ளன. இதை மீறுவது அந்தந்த நாட்டின் இறையாண்மையை மீறிய செயலாகும்.

*
ரோமபுரியில் முன்பு மாதா மாதம் ஒருவர் தெருத் தெருவாக வந்து மாதப்
பிறப்பைக் கூறி அறிவிப்பார். ரோம் மொழியில் இதற்கு கலோர் என்பார்கள். கலோர்
என்ற சொல் நாளடைவில் காலண்டர் என மாறியது

* காந்திக்கு எத்தனையாவது வயதில் திருமணம் நடைபெற்றது? -13-வயதில்.

* மகாத்மா காந்தியின் மகன்களின் பெயர் தெரியுமா? -ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ்.

* அன்னை தெரசா எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - அல்பேனியா.

* கொல்கத்தாவில் அவர் நிறுவிய சேவை அமைப்பின் பெயர்? - மிஷனரீஸ் ஆப் இண்டியா

* அவரது உண்மையான பெயர் தெரியுமா?... - ஆக்னஸ் கோன்க்ஷா போஜாஹி

* கனடாவின் குடிமக்கள் தங்களின் புகைப்படங்களை ஸ்டாம்பாக மாற்றி அதை தபாலில் ஒட்டி அனுப்ப இயலும்

* உலகத்திலேயே பெங்களூரில் மட்டும்தான் ஒரே தளத்தில் இராணுவ விமான நிலையமும், பொது விமான நிலையமும் இயங்குகின்றன.

*
பெங்களூரு 37 % கன்னடர்களையும், 25% தமிழர்களையும், 14% தெலுங்கர்களையும்,
10% மலையாளிக்களையும், 8% ஐரோப்பியர்களையும் 6% மற்றவர்களைகளையும்
கொண்டது.

* சீனாவில் கடையின் வாசலில் சிலுவைச் சின்னம் தொங்கவிடப்பட்டு இருந்தால் அது அடக்குக்கடை என்று அர்த்தமாம்.

*
உலகிலேயே முதன் முதலில் டைரியை உருவாக்கியவர் லண்டனைச் சேர்ந்த ஜான்லெட்ஸ்
என்பவர்தான். கிபி 1816ம் ஆண்டு வெளியிட்டார். இவர் ஒரு ஸ்டேஷனரி கடையில்
பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

* ஜே, எக்ஸ் ஆகிய இரண்டு
எழுத்துக்களும் ஷேக்ஸ்பியருக்குத் தெரியாது. அவர் வாழ்ந்தபோது இந்த
எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்களில் இடம் பெறவில்லை. அவர் இறந்து 14
ஆண்டுகள் கழிந்த பிறகுதான் இந்த எழுத்துக்கள் வழக்கத்திற்கு வந்தன.

No comments:

Post a Comment

THANK YOU