நாம்
எத்தனையோ பேர் நூலகம் சென்று புத்தகங்களை எடுத்து வந்து
படித்துவிட்டு திரும்பி கொடுக்கும் பழக்கத்தை
வைத்துள்ளோம். சிலர், இதுபோன்று நூலகங்களில் இருந்து எடுத்து
வந்த புத்தகங்களை திருப்பிக் கொடுக்காமல் தன்னுடனேயே
வைத்துக் கொள்வதும் உண்டு.
ஆனால்
இதில் சற்று வித்தியாசமாக ஒருவர், தான் நூலகத்தில் இருந்து
சுமார் 51 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்து வந்த இரண்டு புத்தகங்களை
பத்திரமாக தபாலில் அனுப்பியுள்ளார். இது என்ன பெரிய விஷயமா?
என்பவர்களுக்கு மற்றொரு சுவையான விஷயம் உள்ளது. என்னவென்றால்,
51 ஆண்டுகளுக்குமான அபராதத் தொகையும் மணி ஆர்டரில்
அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில்
உள்ள போனிக்ஸ் நகரின் கேமல்பேக் உயர்நிலைப் பள்ளி
நூலகத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அந்த
நூலகத்தின் பொறுப்பாளர் ஜார்ஜெட் பார்டைன் கூறுகையில், நேற்று
முன்தினம் நூலகத்திற்கு ஒரு தபால் வந்தது. அந்த தபாலில் 2
புத்தகங்கள் இருந்தன. அவை 1959ஆம் ஆண்டு நூலகத்தில் இருந்து
எடுத்துச் செல்லப்பட்டவை. அத்துடன் ஒரு கடிதமும், ரூ.47,000க்கான
மணி ஆர்டரும் இருந்தது.
அந்த
கடிதத்தில், இந்த புத்தகத்தை எடுத்த மாணவரது
குடும்பத்தினர்தான் இந்த புத்தகங்களை திருப்பி
அனுப்பியிருப்பது தெரிய வந்தது.
கடிதத்தில்,
இந்த புத்தகங்களை இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் 51
ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துச் சென்றதாகவும், அப்போது, அவர்கள்
வீடு மாறி வேறு மாகாணத்திற்குச் சென்றுவிட்டதால் அப்போது
அந்த புத்தகங்கள் நூலகத்திற்கு திருப்பிக் கொடுக்க முடியாமல்
போய் விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்,
தற்போது பரணில் இருந்து அவற்றை எடுத்த, அந்த மாணவனது
குடும்பத்தினர், அப்போதைய ஒரு நாள் அபராதத் தொகையைக் 51
ஆண்டுகளுக்குக் கணக்கிட்டு மணி ஆர்டரில் அனுப்பியிருப்பதாக
அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தினசரி
2 சென்ட் என்றாலும் 51 ஆண்டுகளில் அபராதத் தொகை ரூ.35,000 தான்
ஆகிறது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் அபராதத் தொகை
அதிகரித்திருக்கலாம் என்பதால் 47,000 அனுப்பியதாகவும்
அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
THANK YOU