மனமெனும் குரங்கு மடைப்பயலே!!!
யார் யாரோ என்னை குழப்புவதாக நான் நினைத்ததுண்டு.. ஆனால் பிறகுதான்
உணர்ந்து கொண்டேன். என் மனமே அந்த குழப்பவாதி என்று. இது செய்யும்
சேட்டைகள் என்ன வென்று சொல்வது. அதனோட calculations per minute எவ்வளவு
என்றே சொல்லமுடியாது. அந்த அளவுக்கு கணக்கு போட கூடியது. நான் மகரிஷி ரமணர்
கூறியது போல ஆன்ம விசாரம் செய்ய தொடங்கினேன். மெதுவாக நான் யார் என புரிய
ஆரம்பித்தது. அவர் கூறியது போல நான் யார் என கண்ணை மூடி என் மனதினிலே தேட
ஆரம்பிதேன் . அதன் தீவிரம் அதிகமாகிய போது உலகத்தையும், என்னை சுற்றியும்,
நான் செய்யும் செயல்களை கூட பார்த்து கொண்டு மட்டுமே இருப்பதை போலவும்
தோன்றியது. ஆனால் அவ்வாறு பார்க்கும் போது மனம் உடனே எண்ண அலைகளில் இழுக்க
தொடங்கும். உடனே மறுபடியும் நான் யார் என தேட தொடங்குவேன், ' நான்'
என்னையே பார்ப்பது போல தோன்றும் .ஆனால் உண்மையில் உள்ளது நான் ஒன்றே
.அப்போது நான் பார்ப்பதாக தோன்றும் 'நான்' உண்மை அல்ல . அது மனத்தின்
மாயை. உடனே பார்பதாக தோன்றும் 'நான் ' இல் கவனத்தை வைப்பேன். அப்போது
இன்னொரு நான் இந்த நான்-ஐ பார்பதாக தோன்றும். இவ்வாறு தொடர்ந்து செய்யும்
போது நான் என்பதே ஆன்மாவில் ஒடுங்கி ஆன்மம் ஸ்வயம் பிரகாசமாக ஒளிரும் என
ரமணர் கூறுகிறார் . இந்த அனுபவம்எனக்கு ஒரு சில செகண்ட்ஸ் தோன்றியது போல
தெரிந்தது.ரமணரின் அருளால் இந்த பாக்கியம் கிடைக்க பெற்றது.
மூச்சு காற்று உள்ளே இழுக்கும்போது மனமானது செயல் படுவது போல
தோன்றுகிறது . அதனால் பிராணனே எண்ணங்களை ஏற்படுத்துகிறது என்பது
தெளிவாகிறது.
No comments:
Post a Comment
THANK YOU