
அது சரி.. முதலில் விதி எது என்பதை எப்படி கண்டு
பிடிப்பது. அதை வெல்வதாக கூறுவதற்கு. விதியாக ஒன்றை நினைத்து அதை மாற்றி
வென்றதாக கூறுவது உண்மையில் விதி அல்ல.அப்படி நினைப்பது எல்லாம் கடவுள்
அமைத்த மென்பொருளால் என்றே எனக்கு தோன்றுகிறது. அவ்வாறு நினைத்து வெல்ல
வேண்டும் என்பதே விதியாக கடவுள் எழுதியது. இது எல்லாம் அகங்காரத்தின்
விளையாட்டு. அதுதான் ஆட்டுவிக்கிறது. நான் என்பதை தோற்றுவிப்பதே அதுதான்.
விதியை வென்று விட்டதாக கூரவைப்பது கூட அதுதான். அதற்காக விதியே என சும்மா
உட்கார்ந்து விட்டால் எல்லாம் நடந்து விடுமா என கேட்பீர்கள். சரி என
உட்கார்ந்து பாருங்கள் அப்படி உங்கள் விதி விட்டால். ஆனால் சிறிது
நேரத்தில் பசி எடுக்க ஆரம்பித்தால் அட போ பா பசிக்கிறது என எழுந்து ஓடி
விடுவீர்கள். இறைவன் முன் கூட்டியே அவரவர் தலை எழுத்தை எழுதி விட்டான்
என்பதே என் நம்பிக்கை என் விதியும் கூட.
சரி இதில் இருந்து என்னதான் கூற வருகிறாய் என்பது உங்களுடைய அடுத்த கேள்வி..என் பதில் விதி வலியது. இது மட்டுமே.
நான் இதை எழுதிய பின் தற்செயலாக படித்த விதி பற்றிய கட்டுரை. இதையும் படிக்கவும் தமிழர்கள் விதியை நம்பாதவர்களா ?
GURU
வள்ளலார் பாட்டு ஒன்று நியாபகம் வருகிறது.
" ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ வாட்டுகின்ற
அஞ்சு புல வேடற்கு அறிவை பறிகொடுத்து
என் நெஞ்சு புலர்ந்தோங்கு நிலை. "
ரமணரின் திரு வாய்மொழியும் கூட,
"நடப்பது என்செயினும் நில்லாதுநடவாதது என் செய்யினும் நடவாதுஅதனால் அமைதியாய் இருப்பது நன்று. "
நான் இதை எழுதிய பின் தற்செயலாக படித்த விதி பற்றிய கட்டுரை. இதையும் படிக்கவும் தமிழர்கள் விதியை நம்பாதவர்களா ?
GURU
No comments:
Post a Comment
THANK YOU