Saturday, 5 January 2013

முரண்பாடான பழமொழிகள்

முரண்பாடான பழமொழிகள்

நம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் சில வார்த்தைகளுக்கு பல அர்த்தமுண்டு .மேடை சிலேடை பேச்சுகளில் அண்ணாவை மிஞ்சியவர் யாரும் இல்லை.எல்லாமே நம் பயன்படுத்தக்கூடியதில் தான் இருக்கிறது  .நம் பேச்சு வழக்கில் ஒரு சில பழமொழிகளை  கூட தவறாக பயன்படுத்தி வருகிறோம் .அவற்றில்  "படிப்பது இராமாயணம்   இடிப்பது  பெருமாள் கோவில் " மற்றொன்று "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் " என்பதையும் பற்றி பார்போம் .கல்யாணத்தில் ஒரு பொய் சொல்லி தப்பிக்கிறது பெரிய விபரம் , இதிலே ஆயிரம் பொய் சொல்லி எப்படி தப்பிக்கிறது .
                "படிப்பது இராமாயணம்   இடிப்பது  பெருமாள் கோவில் "

பழங்காலத்தில்  அரவை எந்திரம் இல்லாத  காலம் ,நெல்  அரைக்க உரல் ,திருக்கைகளை பயன்படுத்துவார்கள் .வீடுகளில்  உரலும் ,திருகையும் ,அம்மியும் ,ஆட்டுக்கல்லும் கண்டிப்பாக இருக்கும் .திருகையில் நெல்லை கொட்டி கைபிடித்து  சுழற்றி அல்லது உரலில் கொட்டி  உலக்கை வைத்து குத்தி பிறகு முறம்  கொண்டு புடைத்து  நெல்லை தனியாக பிரிப்பார்கள் .கோவில்களில்  தெய்வத்திற்கு உணவு  படைப்பதற்கு    தனியாக   வேலையாட்கள்  இல்லாமல் ஊரிலுள்ளவர்கள் ஆலய தொண்டாக  நெல்லை குத்தி  தருவார்கள் .அவர்களுக்கு  இராமாயணத்தின்  பெருமைகளை காதிலே அந்தணர் ஓதுவார்கள் .அவ்வாறு  கேட்ட மக்கள் தாம் தவறு செய்யும் போது காதிலே ஓதபட்ட இராமாயணம்   இடித்து உரைக்கும் என்பதாகும்  .இராமாயணம் படித்து விட்டு கோவிலை யார்இடிப்பார்கள் . இன்று  அது நகைச்சுவை உவமையாக அதுவும் மாறி பொருளும் மாறிவிட்டது.

            "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் "

 இன்றைக்கு பெண் தேடும் படலம் என்பதே பெரிய சவாலான ஓன்று. முறையாக திருமணம் செய்து கடைசிவரை வாழ்வது என்பது இன்று குறைந்து வருகிறது.நகரங்களில் ஐந்து ஆண்டுகள் கூட தாக்கு பிடிக்காமல் நீதிமன்றத்தில் நிற்பவர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது."திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்  "என்பது பழமொழி  .திருமணம் எதற்க்காக செய்கிறோம் ? பலருக்கு விடை தெரிவதில்லை .திருமணம் செய்வது மகிழ்சியாக இல்லறத்தை நடத்துவதற்கும், நமக்கு பிறகு  சந்ததியை  "வாழையடி வாழையாக "உருவாக்குவதற்கும்  ,இந்த உலகில் தமக்கு பிறகு பெயர் நிலைத்து நிக்கும்படி  வாழ்கையின்  இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் வாழ்வதற்குமே.

        இப்படி  இருக்கும் போது ஒரு பொய் சொல்லி சமாளிப்பதே பெரிது , ஆயிரம்  பொய்கள் சொன்னால் எப்படி வாழ்கை  வாழ்வது .ஆயிரம் முறை போய் என்பது வழக்கத்தில் மருவி ஆயிரம் பொய் என்றாகி விட்டது.பழமொழியே சொல்லி வைத்து விட்டார்கள்  அப்புறம்மென்ன என்று தவறுகளை நியாயபடுத்தினால் "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு "என்பர்கள்.அது போல கடைசியில் அரிசந்திரன் வீட்டுக்கு  அடுத்த வீட்டுகாரர்  என்ற பெயர் தான் நிலைத்து நிற்கும்.

            உலகத்தில்   மாறும் என்ற சொல்லை தவிர எல்லாமே மாறி விடும் .காலப்போக்கில் சொற்கள்  மருவி எத்தினையோ ஊர்களின்  பெயர்கள்  மாறி விட்டது.கிராமங்களில் வாழ்பவர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள். இராமாயணம் வால்மீகி எழுதியது, அவர் கொள்ளைகார இருந்து பின் மனம் திருந்தி எழுதியது .அதை  கம்பர்  தமிழ் மொழியில் சுவைபட எழுதினார்  .இராமாயணம்  உண்மை தன்மை அவரவர் பகுத்தறிவுக்கு பொறுத்தது.அதை பற்றி ஒரு பதிவு கூடிய விரைவில் வெளியாகும் .

No comments:

Post a Comment

THANK YOU