Friday, 4 January 2013

இரண்டாம் உலகப்போர் -- பகுதி 1


        உலக வரலாற்றில் பல போர்கள் நடைபெற்றது ,ஆனாலும் இரண்டாவது உலகப்போருக்கு தனி இடம் உண்டு. காரணம் போர் என்பது தனி இரு நாடுகள் சண்டை இடுவது ஆனால் உலக நாடுகள் இரு அணிகளாக உலகத்தின் பல பகுதிகளில் நடந்த சண்டையில் உயிர் சேதமும் ,பொருட்செய்தமும் கணக்கிட முடியாதவை . யூத இனத்தவர்களில்  பாதிபேர் காணாமல்போனதும்,மக்களில் ஒரு மில்லியன்  அதிகமாகனோர் அகதிகளாகவும்,நோயாளிகளாவும்   பல சிரமங்களுக்கு உள்ளானார்கள்.
இரண்டவது போருக்கு பின் விளைவுகள் படுமோசமாக இருந்தது .பல புதிய நாடுகள் தோன்றின .,சில நாடுகள் பிளவுபட்டு போனது.படை வீரர்களை விட மக்களே அதிகமானோர் இறந்தனர் .இதில் ஜப்பான் அதிகம் பாதிக்கப்பட்டது  .முதலில் முதல் உலகப் போர் பற்றி பார்ப்போம் .

விமான எதிர்ப்பு பீரங்கி 

   ஐரோப்பாவில்  தொழில் புரட்சி ஏற்பட்டு  மித மிஞ்சிய பொருட்களை உற்பத்தி செய்தனர்.அப்படி உற்பத்தி செய்த பொருட்களை   விற்க காலனி சந்தைகளை தேடின .இந்த  நோக்ககத்தினால் தான் ஐரோப்பியர்கள்   ஆசியா , ஆப்ரிக்கா கண்டங்களில் காலனிகளை நிறுவியது.  அதில்   போட்டி ஏற்ட்பட புதிய ஆயுதங்கள்  தயாரிக்கவும்  ,ஓவ் வொரு நாடும் படை பலத்தை பெருகவும் ,பொருளாதாரத்தில் முன்னேறவும் ,கொள்கை காரணமாகவும் போட்டியும் பொறாமையும் நிறைந்து  இருந்தது. ஜெர்மனிக்கும் ,பிரான்சுகும்  எல்லை பிரச்சனை ,பல நாடுகளுகுள்  முடியாட்சியாக  இருத்தாதல்  எல்லை பிரச்சனை இருந்து வந்தது. 1914 ஆம் ஆண்டு    ஆஸ்திரியா நாட்டு இளவரசன்  பிரான்சிஸ்  பெர்ணடேஸ்யும் அவரது மனைவியையும் செர்பிய மாணவன் பிரின்சிப் சுட்டு கொன்றுவிட்டான் .இதுவே முதல் உலகப்போருக்கு வித்திட்டது.செர்பிய மாணவனை தண்டிக்காமல் இருந்ததால் செர்பிய மீது ஆஸ்திரியா படையெடுத்தது .செர்பியாவுக்கு  ஆதரவாக  மைய நாடுகள்  செருமனி ,பல்கேரிய ,ஹங்கேரி ,ஓட்டமான் பேரசுகளும் , ஆஸ்திரியாக்கு ஆதரவாக  நேச நாடுகள்  பிரான்ஸ்,பிரிட்டன் ,ரஷ்ய ,அமெரிக்க ,ஜப்பான் ,இத்தாலியும்   போரிட்டது.இந்த போரில் முடிவில் பத்து மில்லியன் பேருக்கு மேல் இறந்ததாக  கணக்கிடப் படுகிறது .

துப்பாக்கிகள் 
     முதல் உலகப்போரின் பல பகுதிகளை பிடித்தாலும்  முடிவில் ஜெர்மனி  தோற்று  1918 இல் வேர்செயில்  உடன்படிக்கை ஏற்பட்டது .இதனால் நேச நாடுகளுக்கு பெரிய அளவில் யுத்த இழப்பு கொடுக்க வேண்டி இருந்தது .ஜெர் ர்மனியின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்க பட்டது ,பல காலனி நாடுகளை  இழக்க நேரிட்டது . மக்கள் வறுமையும் வேலையில்லா திண்டாட டுமும் மிக வாட்டியது.இந்த  ஆண்டு ஜெர்மனியில் முடியாட்சி மறைந்து மக் களாட்சி  தோன்றியது.1919 ல் ரஷ்ய தான் முடியாட்சியை மறைந்து கம்யுனிசிட் சோவியத்யூனியன் ஆக மாறியது.இதன் பிறகு பல நாடுகளில்   கம்யுனிசிட்  கொள்கை பரவ ஐரோப்பாவை மாற்றம்  கொள்ள செய்தது .  இத்தாலியில் முசோலினி பாசிச கட்சியின் தலைவரானர்  .1922 ல்  அவர்     சர்வாதிகாரியானார்   .இந்த காலகட்டத்தில் தான் நாசி கட்சியின் தலைவர் ஹிட்லர்  1933 ல் ஆட்சியை  பிடித்தார் .ஜெர்மனியை வளம் மிக்கதாக்கவும்  ,வல்லரசுகாவும் ஆக்க ஹிட்லர் ஆசைப்பட்டார் .

ஜெர்மனி மற்ற நாடுகளில் இருந்து கனிம தாதுக்களை அதிக அளவில் இறக்குமதி செய்தது.  ரூர்  பள்ளத்தாக்கில் இருந்து  நாட்டின் முக்கிய பாதைகள் இருப்புப்பாதை  போடப்பட்டது .ஜெர்மனி போர் கருவிகளை 23 மடங்கு உயர்த்தியது . நவீன ரக பீரங்கிகளையும் ,போர் விமானங்களையும் ,சிறந்த  போர் கப்பல்களையும்  ,நீர் மூழ்கி கப்பல்களையும்  உருவாக்கினர் .நாசி கட்சியை தவிர அனைத்தும் தடை செய்து சர்வாதிகாரி ஆனார்.ஜெர்மனியின் ஆயுத பெருக்கம் ஐரோப்பாவை பயம் கொள்ள செய்ததது. ஹிட்லர் உலகம் முழுவதையும் தன் ஆட்சிக்கு  கொண்டு வர விரும்பினர்  .ஜப்பான் 1931ல் சீனாவின் மஞ்சூரியவை தாக்கியது .அப்பொழுது சீனா புரட்சி நடைபெற்ற சமயம் .  .ஜப்பான் ஆசியா பகுதி முழுவதையும் தன் ஆட்சிக்கு  கொண்டு வர விரும்பியது .இத்தாலியும்  இராணுவ தடவாளங்களை குவித்தது .
ஜெர்மனி

       1939  ல்  ஜெர்மனி போலந்து தாக்கியது.இதுவே இரண்டாம் உலகப்போருக்கு வழி வகுத்தது .  ஜெர்மனி மீது  நேச நாடுகள்  பிரிட்டனும் ,பிரான்சும் பதில் தாக்குதலை ஆரம்பித்தது . அச்சு நாடுகள்  இத்தாலி ,ஜெர்மனி,ஜப்பான்  நேரடியாக போரை  ஆரம்பித்தது.இந்த போர் ஐரோப்பா முழுவதிலும் ,ஆசிய ,ஆப்ரிக்கா ,பல காலனித்துவ பகுதிகளிலும் நடைபெற்றது  .1940 ல் மேற்கு ஐரோப்பா முழுவதும் ஜெர்மனி வசமானது .கிழக்கில் சோவியத்யூனியன்  வரை நீண்டுவிட்டது..போரானது விமான தாக்குதல் கடுமையாக இருந்தது.ஜெர்மனியின் பீரங்கி தொழில்நுட்ப சிறப்பு வாய்ந்ததாக இன்றுவரை கருதபடுகிறது. ஆசிய பகுதிகளான சீனா வின் சிலவற்றையும் ,இந்தோனேசியா  ( அப் பொழுது இந்தோனேசியாவை ஹோலந்து நாட்டு டச்சு படை வசம் இருந்தது   ) ,மலேசியா ,சிங்கப்பூர் ,கம்போடியா,தாய்லாந்து ,பர்மா அந்தமான் ,நிகோபார்  தீவுகள்    (அப் பொழுது  பிரிட்டன் படை வசம் இருந்தது)வரை  கைப்பற்றியது.

 ஜப்பானின்  நீர் மூழ்கி கப்பல்
            1941 ல் ஜப்பான் படைகள் அமெரிக்காவின் ஹோவர்ட் துறைமுகத்தை தாக்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுஇருந்த  3  விமானம் தாங்கி கப்பல்களையும் 160 போர்விமானங்களையும் அழித்தது .இதனால் அமெரிக்காவும் தன்  பங்கிற்கு  போரை துவக்கியது. ஜெர்மனியின் கடுமையான விமான தாக்குதலையும்,பீரங்கி தாக்குதலையும் சமாளிக்க முடியாமல் பிரிட்டன் தடுமாறிக்கொண்டு இருந்தது .இந்த தருணத்தில் தான் ஆயுத உதவி மட்டுமே செய்து வந்த  அமெரிக்க  நேரடியாக பிரிட்டனுக்கு  ஆதரவாக களத்தில்  இறங்கியது .

No comments:

Post a Comment

THANK YOU