ஒருநாள் ராதா துவாரகை நகருக்கு வந்தாள். ருக்மணி ராதாவை வரவேற்று பாலும்
தேனும் கொடுத்தாள். இருவரும் கண்ணனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பின்னர் ராதா சென்று விட்டாள்.
அன்றிரவு கண்ணனுக்குப் பள்ளியறையில் ருக்மணி பாதபூஜை செய்தாள். அவன் பாதங்களில் சிறு கொப்புளங்கள் இருந்தன. இதைக் கண்ட ருக்மணி, கொப்புளங்கள் உண்டான காரணத்தைக் கேட்டாள்.
இன்று பகலில் ராதாவுக்குக் கொடுத்த பால் சூடாக இருந்தது. அதை பருகினாள். “”அவள் தன் இதயத்தில் பூஜிக்கும் என் பாதங்களில் பாலின்சூடு பட்டு இக்கொப்புளங்கள் உண்டாயின” என்றான் கண்ணன். ராதா பால் சூடாக இருந்ததாகச் சொல்லவில்லையே என்றாள் ருக்மணி. நீ பிரியமாகக் கொடுத்ததால் ராதா குடித்து விட்டாள். ஆனால், அவள் கொண்ட அன்பினால் நெஞ்சிலே குடியிருக்கும் என் பாதங்களில் சூடுபட்டு விட்டது.
உண்மையறிந்த ருக்மணி, “”உன் பாதங்கள் கோமளமானவை. அதைவிடக் கோமளமானது ராதையின் நெஞ்சம். என்னே! ராதாவின் பிரேமை!”என்று ருக்மணி வியந்தாள். சூடான பதார்த்தத்தை உண்பதில்லை என்பது காதலர் இலக்கணம். என்ன செய்வாள் ராதை! கொடுப்பவள் ருக்மணியாயிற்றே என்று பாலைக் குடித்து விட்டாள். ராதா தன் மீது கொண்டிருந்த ஈடு இணையற்ற அன்பை இதன் மூலம் கண்ணன் வெளிப்படுத்தினான்

No comments:
Post a Comment
THANK YOU