Tuesday, 2 October 2012

டான்சு ஆடற படம் ( gif ) - எப்பிடி பண்றது ?


அன்பான பதிவுலக தோஸ்துங்களே !! அல்லாருக்கும் வணக்கம் ,






இப்போ !! இந்த பதிவுல , நீங்க சில gif போட்டோக்கள ,பாத்து 
இருப்பீங்கோ !! அதாவது , ஓடரா மேரி , நடக்கறா மேரி , உன்னும்
நெரியோ, அதல்லாம் இப்ப இப்ப ரொம்ப சிம்பிளா எப்பிடி பண்றது ,
இன்னு பாக்கலாம் !! 

மொத்தல்ல , இங்க போய், இந்த சாப்டு வேர டவுன் லோடு 
பண்ணிக்கோங்க !! தல , (சின்னது தான் , 20 kb அளவு )

அப்பால , அத extract , பண்ணி ரன் பண்ணிட்டா , போதும் , செரி ,
இப்போ !! பெயிண்ட் ஓபன் பண்ணிக்கோங்க !! அதுல ஒரு சின்ன 
கோடு , போட்டு ,save as ல , கிளிக் பண்ணி , டெஸ்க் டாப் ல save 
பண்ணுங்க ,gif பைலா தான் save பண்ணனும் ,

இப்போ , மறுபடி பெயிண்ட் போய் உன்னொரு கோடு வேர கலர்ல 
போட்டு அதே மேரி save ,பண்ணுங்க .

நானு இந்த மேரி போட்டு கீரேன் பா !! ரெண்டு படமும் பாருங்க ,






 இப்போ !! இது ரெண்டும் சேந்து இன்னா , மேரி ஆட்டம் போடுது 
பாருங்க , தலீவா !! 

Photobucket 

அப்பால , இந்த software ஓபன் பண்ணா , உங்களுக்கு இது மேரி 
வரும் 

,

இதுல , இருக்குற காலி எடத்துல நீங்க save பண்ண gif போட்டவ ,
ஈத்து உடுங்க , அதாம்பா ட்ராக் பண்ணி உடுங்க , உன்னோன்னையும் 
அதே மேரி பண்ணுங்க , 

இப்போ !! Make animated gif இன்னு கீரத ஒரே அமுக்கு அமிக்கி 
எங்க save பண்ணணுமோ !! அத குடுத்து save பண்ணிடுங்க ,
வேல முடிஞ்சிது ,

நல்லா டிராயிங் வரையத் தெரிஞ்சவங்களுக்கு , கூடவே கற்பனை 
அதிகமா கீரவங்களுக்கு , ( நம்பளுக்கு இல்லப்பா !! ) 
பொம்ம போட்டு , இது மேரி ஈசியா நெரியோ பண்ணலாம் பா !! 

அய்யே !! பட்சிட்டு அப்பிடியே போனா !! இன்னா அர்த்தம் ,
ரவ ஒட்டு போட்டுட்டு போங்க தல , கருத்தும் போட்டா 
நானு இன்னா வானாம்னா சொல்லப் போறேன் !!  
Photobucket

No comments:

Post a Comment

THANK YOU