Wednesday, 3 October 2012

கூகுளின் டெக்ஸ்டாப்.




கூகுளில் புதிதாக டெக்ஸ்டாப்பினை அளித்துள்ளார்கள்.
இதுவரை உபயோகிக்காதவர்கள் தற்சமயம் ஒரு முறை
உபயோகித்துப்பார்க்கலாம்.
முதலில் உங்கள் மெயிலை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்.
அதில் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு
Orkut,Gmail.Calender.Document.Web.More என வரிசையாக உள்ள
தில் More கிளிக் செய்யவும்.அதில் கீழாக உள்ள Even More
கிளிக்செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.

அதில் உள்ள டெக்ஸ்டாப்பினை கிளிக்செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 
இதை பதிவிறக்கி சேமித்துக்கொள்ளவும்.(இதன்கொள்ளளவு
2 எம்.பிக்குள்தான் வரும்). உங்கள் கணிணியில் இன்ஸ்டால்
செய்துகொள்ளவும்.இதில் கெடிகாரம்,தட்பவெப்பநிலை.
நமது புகைப்படங்களின் ஸ்லைட் ஷோ,பிளாக்கர் தகவல்கள்.
ஜி-மெயில் மற்றும் குகூள் அட்ரஸ்பார் விண்டோ உட்பட 
அனைத்தும் விண்டோவினில் வந்துவிடும். 

 மேலே உள்ள படத்தை பாருங்கள். இந்த விண்டோவினை
நாம் விருப்பத்திற்கு ஏற்ப சைடிலோ, டாக்ஸ்பாரிலோ,
மேல்புறமோ வைத்துக்கொள்ளலாம்.இதில் உள்ள
Add Gadgets மூலம் 200 க்கும் மேற்பட்ட வசதிகளை
நாம் கொண்டுவரலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதைப்போல் நமது கணிணியில் உள்ள புகைப்படங்களையும்
ஸ்லைட் ஷோவாக கொண்டுவரலாம்.கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
 
அதைப்போல் நமக்கு விருப்பமான இணையதள முகவரிகளை
இதில் உள்ள வெப் கிளிப்ஸ்ஸில் சேர்த்துக்கொள்ளலாம்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அதைப்போலவே Gmail-ஐ இதிலிருந்தே நாம் பார்த்துக்
கொள்ளலாம். மெயில் அனு்பபலாம்.கீழே உள்ள
படத்தை பாருங்கள்.
 
இதைப்போலவே நாம் கூகுளில் உள்ள அட்ரஸ்பார் மூலம்
தேவையான முகவரிகளை பெறலாம்.கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
 
பயன்படுத்தி பாருங்கள். பிடித்திருந்தால் வைத்துக்
கொள்ளுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் 
முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன். 
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
டேய்...டாடியை அப்படியெல்லாம் எட்டி உதைக்ககூடாது...
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
 
 டிசைன் செய்தபின் வந்தபுகைப்படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
You might also like:

No comments:

Post a Comment

THANK YOU